எல்ஜி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன், எல்ஜி வி40 திங்க்-க்யூ மாடலை கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது.

எல்ஜி வி40 திங்க்-க்யூ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே இது 5 கேமராக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான். பின்புறத்தில் மூன்று கேமராக்கள் மற்றும் முன்புறம் இரண்டு செல்ஃபி கேமராக்கள் கொண்டுள்ளது. பின்புறம் 12 மெகா பிக்ஸ்செல் சென்சார் f/1.5 அப்பச்செர்(aperture), பிரைமெரி லென்ஸ் கொண்ட கேமரா, 16 மெகா பிக்ஸ்செல் சென்சார் அகலமாக காட்சிப்பதிவு செய்யும் லென்ஸ் கொண்ட மற்றும் 12 மெகா பிக்ஸ்செல் சென்சார் தொலைதூர பார்வை லென்ஸ் கொண்ட கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன. முன்புறத்தில் இரண்டு செல்ஃபி கேமராக்கள் உள்ளன.

எல்ஜி வி40 திங்க்-க்யூ -வின் மற்ற சிறப்பம்சம்சங்களாக ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, மிலிட்டரி கிரேட், பூம்பாக்ஸ் ஸ்பிக்கர் மற்றும் 19.5:9 ஓஎல்இடி நாட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் தண்ணீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஐபி68 கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பூம்பாக்ஸ் ஸ்பிக்கர்ஸ், 32பிட் ஹைஃபை குவாட் டியேசி ஆடியோ மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்ஜி வி40 திங்க்-க்யூ ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. 6.4 இன்ச் (1440×3120) ஓஎல்இடியுடன், 19.5:9 கார்ணரிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 2 ரிபி வரை மைக்ரோ மெமரி கார்டு கொண்டு மெமரியை அதிகரித்துக் கொள்ளலாம்.

அத்துடன் 3,300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் குவிக் சார்ஜ் செய்யும் வகையில் 3.0 வயர்லெஸ் சார்ஜிங், யூஎஸ்பி – சி டைப் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் 158.7×75.8×7.79mm அளவு மற்றும் 169 கிராம் எடை கொண்டுள்ளது.

எல்ஜி வி40 திங்க்-க்யூ-வின் விலையானது ரூ.60,000ல் இருந்து மொபைல் மாடல்களை பொருத்து விலை மாறும். அமேசான் தளத்தில் இந்த போன் 49,990க்கு கிடைக்கிறது.

தற்போது அமேசான் கிரேட் இந்தியன் சேலில் பிரைம் வாடிக்கையாளர்கள் இந்த எல்ஜி வி40 தின்க்யூ போனை எச்டிஎப்சி கார்டு பயன்படுத்தி வாங்குவதன் மூலம் 10 சதவீத தள்ளுபடி விலையில் பெறலாம். அதேபோல், பஜாஜ் பைனான்ஸ் மூலம் வாங்கும் போது, இ.எம்.ஐ கிடையாது. இது போக, ரூ.1000 அமேசான் பே மூலம் வாங்கும்போது கேஷ்பேக் சலுகைகளும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here