எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

LG WING will initially launch in South Korea starting next month to be followed by key markets in North America and Europe. The price of the new smartphone has not been revealed yet.

0
123

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் திங்களன்று எல்ஜி விங் எனப்படும் T-வடிவ இரட்டை திரை ஸ்மார்ட்போனை சியோலில் ஒரு ஆன்லைன் நிகழ்வு மூலம் வெளியிட்டது. இருப்பினும், மைக்ரோசாப்ட் சர்பேஸ் டியோ, மோட்டோரோலா ரேஸ்ர் மற்றும் சாம்சங் கேலக்ஸி போல்டு போன்ற மற்ற இரட்டை திரை ஸ்மார்ட்போன்களைப் போல் அல்லாமல், எல்ஜி விங் இரண்டு டிஸ்பிளேக்களைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்.

இரண்டு ஸ்கிரீன் கொண்ட விங் ஸ்மார்ட்போன் உறுதித்தன்மையை எல்ஜி சுமார் 2 லட்சம் முறைசோதனை செய்ததாக தெரிவித்திருக்கிறது. இதன் மல்டி ஆப் மோட் கொண்டு இரு செயலிகளை ஒவ்வொருதிரையில் ஒரே சமயத்தில் பயன்படுத்த முடியும்.

முதற்கட்டமாக இதன் விற்பனை தென்கொரியாவில் துவங்குகிறது.

எல்ஜி விங் சிறப்பம்சங்கள் : 

 • 6.8 இன்ச் 2440×1080 பிக்சல் FHD+ 20.5: 9 P-OLED டிஸ்ப்ளே
 • 3.9 இன்ச் 1240×1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன்
 • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
 • அட்ரினோ 620 ஜிபியு
 • 8 ஜிபி ரேம்
 • 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு 10
 • 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS
 • 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9
 • 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2
 • 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, f/1.9
 • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
 • யுஎஸ்பி டைப் சி ஆடியோ 
 • 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
 • யுஎஸ்பி டைப்-சி
 • 4000 எம்ஏஹெச் பேட்டரி
 • குவிக் சார்ஜ் 4.0
 • 25 ஃபாஸ்ட் சார்ஜிங்

அக்டோபர் மாத வாக்கில் வட கொரியா மற்றும் ஐரோப்பாவில் வெளியாகிறது. எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அரோரா கிரே மற்றும் இல்யூஷன் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here