சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து, அந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது. இதில் அனைத்துத் தரப்பு வாதங்கள் முடிவடைந்தநிலையில், எழுத்துப்பூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து கடந்த ஜனவரியில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், 18 தொகுதிகளும் காலியாகவுள்ளதால் தேர்தல் நடத்தக்கோரிய தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here