எம்எல்ஏக்களை பார்க்க அனுமதி மறுப்பு: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திக்விஜய் சிங் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்

The political turmoil in Madhya Pradesh moved to Bengaluru today as senior Congress leader Digvijaya Singh sat on a protest after he was stopped from meeting the rebel MLAs lodged in Ramada hotel, hours ahead of the Supreme Court hearing a petition filed by the BJP seeking an immediate floor test of the Kamal Nath government.

0
353

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் கமல்நாத்துக்கு உத்தரவிடக் கோரி பாஜ முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் தாக்கல் செய்துள்ள மனு இன்று(புதன்கிழமை) உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில் பெங்களூருவில் தங்கியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள கோஷ்டி பூசலால் ஜோதிராத்திய சிந்தியாவுக்கு ஆதரவான 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெங்களூரில் கடந்த 3 நாள்களாக முகாமிட்டுள்ளனா்.

பெங்களூரு, தேவனஹள்ளி அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கா்நாடக காவல் துறை தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தனா். இதைத் தொடா்ந்து, 21 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவா்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் தங்கியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க திக்விஜய் சிங் அங்கு இன்று விரைந்தார்.

ஆனால், எம்எல்ஏக்களை பார்க்க போலீசார்  அனுமதி மறுத்ததால் திக்விஜய் சிங் தனது ஆதரவாளர்களுடன் ரமாடா ஹோட்டல் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினரை நாங்கள் சந்தித்தபோது, அவர்கள்  தெரிவித்தார்கள். எம்எல்ஏக்கள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். நான் தனிப்பட்ட முறையில் 5 எம்.எல்.ஏக்களுடன் பேசினேன், அவர்கள் சிறைபிடிக்கப்பட்டவர்கள் என்று சொன்னார்கள், தொலைபேசிகள் பறிக்கப்பட்டன,  முன்னால் போலீஸ் உள்ளது ஒவ்வொரு அறையிலும் அவர்கள் பின்பற்றப்படுகிறார்கள் என்றும் எம்எல்ஏக்கள் தெரிவித்தாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here