மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏவிடம் பேரம் பேசியது தொடர்பான எடியூரப்பாவின் தொலைபேசி உரையாடல் பதிவு பொய்யென நிரூபிக்கப்பட்டால், அரசியலில் இருந்து விலகுவேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ நாகனா கவுடா கட்குரின் மகன் சரனாவுடன் பேசுவது பதிவாகியுள்ளது. அதில், ரூ.25 லட்சம் ரொக்கமும், அமைச்சர் பதவியும் அளிப்பதாக எடியூரப்பா கூறும் வகையில் ஆடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், இந்த உரையாடல் பதிவு பொய்யானது என்றும், கட்டுக்கதை என்றும் பாஜக மறுத்தது.
 
இந்நிலையில், தக்ஷிண் கன்னடா மாவட்டத்திலுள்ள தர்மஸ்தலா பகுதியின் கோயில் ஒன்றில் முதல்வர் குமாரசாமி சனிக்கிழமை வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இந்தக் கோயில் வளாகத்தில் இருந்து நான் கூறுகிறேன். நான் வெளியிட்ட எடியூரப்பாவின் தொலைபேசி உரையாடல் பதிவு பொய்யென உறுதிசெய்யப்பட்டால், அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தேவையில்லை. மாறாக, நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன்” என்றார்.

 கர்நாடக மாநிலத்தில், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது.காங்கிரஸில் உள்ள ஒருசில உறுப்பினர்களுக்கும் மஜத உறுப்பினர்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியிலிருந்து விலகவும் தயாராக இருப்பதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

 ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மஜத அதிருப்தி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி ஆட்சியைப் பிடிக்க பாஜக சதி செய்துவருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து வந்தது.
 
இந்நிலையில், மஜத எம்எல்ஏ நாகனகெளடாவை பாஜகவில் இணைப்பதற்காக அவரது மகனிடம் எடியூரப்பா பேரம் பேசியதாகத் தொலைபேசி உரையாடல் பதிவை குமாரசாமி வெளியிட்டார். அதில், கட்சி மாறுவதற்காக ரூ.50 கோடி வரை வழங்கத் தயாராக இருப்பதாகவும் எடியூரப்பா கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஆனால், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டை மறுத்த எடியூரப்பா, இது திட்டமிட்ட சதி என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, முதல்வர் குமாரசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த ஆடியோவில் பதிவான உரையாடல்கள் கீழே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here