எப்போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும் : தெரிந்து கொள்ளுங்கள்

0
401

தமிழக அரசு சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கொரோனா பரவலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையான கைகளை தூய்மைப்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.

 எப்போது கைகளை கழுவ வேண்டும்

1. இருமல் அல்லது தும்மல் வந்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.

2. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.

3. உணவு சமைப்பதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வேண்டும்.

4. கழிப்பறை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவ வேண்டும்.

5. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வேண்டும்.

6. கைகளில் அழுக்கு தெரியும் போது கைகளை கழுவ வேண்டும்.

7. செல்லப் பிராணிகளுடன் தொடர்பில் இருந்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.

தமிழகத்தில் நேற்று(புதன்கிழமை) மட்டும் புதிதாக 509 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சென்னைதான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் நேற்று(புதன்கிழமை) சென்னையில் மட்டும் 380 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் கொரொனோ தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4,882லிருந்து 5202 ஆக அதிகரித்தது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here