எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகலாம்; இந்திய ரூபாயை ரொக்கமாக வைக்க வேண்டாம்: பூடான் ரிசர்வ் வங்கி

0
757

இந்திய ரூபாயை ரொக்கமாக கையில் வைத்திருக்க வேண்டாம். மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பேற்க முடியாது என்று பூடான் ரிசர்வ் வங்கியான ராயல் மானிட்டரி அத்தாரிட்டி (ஆர்எம்ஏ) எச்சரிக்கை செய்துள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன் பூடான் ரிசர்வ் வங்கியான ராயல் மானிட்டரி அத்தாரிட்டி தனது மக்களுக்குக் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ரூபாயை கையில் ரொக்கமாக அதிகமான அளவுக்கு வைத்திருக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.

பூடான் ரிசர்வ் வங்கியான ராயல் மானிட்டரி அத்தாரிட்டி வெளியிட்ட அறிக்கையில் –

Screen Shot 2018-06-22 at 12.31.39 AM

”இந்திய ரூபாயை ரொக்கமாகக் கையில் வைத்து செலவு செய்ய வேண்டாம் . சேமித்து வைக்கவும் வேண்டாம் என்று ராயல் மானிட்டர் அதாரிட்டி (ஆர்எம்ஏ) கேட்டுக்கொள்கிறது . இந்திய ரூபாய் நோட்டுகளைக் கையில் ரொக்கமாக வைத்திருக்கும் மக்கள், அதை வங்கியில் செலுத்தி தேவைக்கு ஏற்றார்போல் எடுத்துப் பயன்படுத்துங்கள்.

எதிர்காலத்தில் 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் போல், ஏதேனும் கொண்டுவரப்பட்டால், கையில் வைத்திருக்கும் இந்திய ரூபாய்க்கு பூடான் ரிசர்வ் வங்கி எந்தவகையிலும் பொறுப்பேற்காது.

இந்திய ரூபாயில் 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் அதிகமாகப் புழங்குகிறது. மிகுந்த கவனத்துடன் 500 ரூபாய் நோட்டுகளை வாங்குங்கள் . இந்திய ரூபாய்களில் ரூ.500 நோட்டுகளை ரூ.25 ஆயிரத்துக்கு மேல் அதிகமாக வெளியே எடுத்து செலவு செய்ய வேண்டாம், சேமிக்கவும் வேண்டாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பிரதமர் மோடி 2016, நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தார்.இந்தியாவில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நேபாளம், பூடான் நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. ஏனென்றால், இந்திய ரூபாயை அங்கு மக்கள் தாராளமாக பயன்படுத்திக்கொள்ள மக்களுக்கு அந்த நாட்டு ரிசர்வ் வங்கிகள் அனுமதி அளித்து இருந்தன.

இந்திய அரசின் திடீர் உத்தரவால் அந்த நாட்டில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர் . கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பின் அங்கு நிலைமை சீரடைந்தது.

Courtesy : The Hindu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here