என்டிஆர் படத்தில் ஸ்ரீதேவியாக நடித்துவரும் ராகுல் ப்ரீத் சிங்கின் ஒளிப்படம் வெளியாகியுள்ளது.

என்.டி.ராமராவின் வாழ்க்கைக்கதையை என்டிஆர் என்ற பெயரில் எடுத்து வருகின்றனர். என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். படத்தின் நீளம் அதிகமானதால் இரண்டு பாகங்களாக படத்தை வெளியிடுகின்றனர். முதல் பாகம் 2019 ஜனவரி 9 ஆம் தேதியும், இரண்டாவது பாகம் 2019 ஜனவரி 24 ஆம் தேதியும் வெளியாகிறது.

என்டிஆருடன் ஸ்ரீதேவி படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் வேடமும் படத்தில் வருகிறது. அவரது வேடத்தில் நடிக்க ராகுல் ப்ரீத் சிங்கை தேர்வு செய்தனர். ஸ்ரீதேவியின் வேடத்தில் ராகுல் ப்ரீத் சிங் எந்தளவுக்கு பொருந்துவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில், ராகுல் ப்ரீத் சிங்கின் ஸ்ரீதேவி தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.

ராகுல் ப்ரீத் சிங் பார்க்க ஸ்ரீதேவி போலிருக்கிறாரா?

என்டிஆர் படத்தை க்ரிஷ் இயக்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்