என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம்

Environment minister Gopal Rai on Friday moved a resolution in the Delhi Assembly against implementation of the National Population Register (NPR) in the National Capital and said if executed, it should be applied using the procedure of 2010.

0
357

மத்திய அரசின் திருத்தப்பட்டகுடியுரிமை சட்டம் (சி.ஏ.ஏ),தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.)மற்றும் தேசிய மக்கள்தொகைகணக்கெடுப்பு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின்பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

மத்திய அரசின்சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசும் என்.பி.ஆர். குறித்து சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இதற்கு பதில் கிடைக்காத வரை என்.பி.ஆரை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு நேற்று(வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டசபையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு  மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here