என்.டி.ராமராவ் ரசித்ததை எடப்பாடி தாக்குவது ஏன்?

Why can't Edappadi Palanisamy understand free speech?

0
324
என்.டி.ராமராவை ஆல் இலை கிருஷ்ணராக சித்தரித்து கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரா 1989இல் “ஆந்திர பூமி” நாளிதழில் வரைந்த கேலிச் சித்திரம்

ஆந்திரப் பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்த என்.டி.ராமராவை 1989 சட்டமன்றத் தேர்தலின்போது அம்மணமாக சித்தரித்து கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரா கேலிச்சித்திரம் வரைந்திருந்தார். ஆந்திர பூமி நாளிதழில் இந்தக் கார்ட்டூன் வெளியானது. (சுரேந்திரா இப்போது தி ஹிந்து ஆங்கில நாளிதழில் கார்ட்டூனிஸ்டாக இருக்கிறார்). என்.டி.ராமராவ் அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மிகப் பெரிய அளவிலான கட்-அவுட்டுகளை ஆந்திரப் பிரதேசம் முழுவதும் நிறுவினார். ஆனால் காங்கிரஸ் கட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இந்தக் கட்-அவுட்டுகளை அகற்ற உத்தரவிட்டது. இதனைச் சித்தரிக்கும் விதமாக என்.டி.ராமராவின் ஆடை தேர்தல் ஆணையத்தால் உருவப்படுவதுபோல சுரேந்திரா சித்தரித்திருந்தார்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது; என்.டி.ராமராவ் எதிர்க்கட்சித் தலைவரானார். தேர்தலுக்குப் பின்னர் ஹைதராபாதிலுள்ள பிரஸ் கிளப் தேர்தல் கார்ட்டூன்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்தது. “அப்போது கண்காட்சிக்கு வந்த என்.டி.ராமராவ் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எனது இந்தக் கார்ட்டூனை மிகவும் ரசித்தார்; விமர்சனங்களை விரும்பாதவர் என்று அறியப்பட்ட அவரே கேலிச் சித்திரங்களின் தன்மையைப் புரிந்தவராக இருந்தார்” என்கிறார் சுரேந்திரா.

தமிழ்நாட்டில் கார்ட்டூன் வரைந்ததற்காக பாலா கைது செய்யப்பட்டது பத்திரிகை சுதந்திரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இதுபோன்ற எந்த அத்துமீறலும் இனி தமிழ் மண்ணில் நடக்கக்கூடாது.

இதையும் அவசியம் படியுங்கள்: கண்டனம்

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்