என் காதலை ஏற்கவோ, நிராகரிக்கவோ நீ யார் அன்புமணி?

0
1201

(ஏப்ரல் 4, 2016இல் வெளியான செய்தி மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.)

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 2, 2016) பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி “21 வயதுக்கும் குறைவான பெண்களின் காதலை ஏற்க முடியாது” என்று சொல்லியிருக்கிறார். இப்படித் தீர்ப்பு சொல்ல நீ யார் அன்புமணி? உனக்குத் தெரியுமா? கனடா தேசத்தில் பாலுறவுக்கான சம்மத வயது 16; நமது இந்திய தேசத்தில் பாலுறவுக்கான சம்மத வயது 18; அரசியல் சாசனத்துக்கு எதிராக, அடிப்படை உரிமைகளுக்கு எதிராக, மானுட சுதந்திரத்துக்கு எதிராக நீ பேசுகிறாய். பாலுறவுக்கான சம்மத வயதைக் குறைக்க வேண்டும் என்று உலகமே முன்னோக்கிப் பயணப்படும்போது தமிழ்நாட்டைப் பின்னுக்கு இழுக்கும் உன்னைப் பெண்கள் இந்தத் தேர்தலில் பின்னுக்குத் தள்ளுவார்கள்.

பதினெட்டு வயதில்தான் திவ்யா தனது காதலைத் தேர்வு செய்தாள்; பதினெட்டு வயதில்தான் கவுசல்யா தனது காதலைத் தேர்வு செய்தாள்; இருபத்தி இரண்டு வயதில்தான் கோதைலட்சுமி தனது காதலைத் தேர்வு செய்தாள்; இவர்களுடைய காதலைத் தோல்வியடையச் செய்தது உன்னைப்போன்ற ஆணாதிக்கத் திமிர்வாதிகள் உருவாக்கும் பகைச் சூழல்தான். உனது சாதியத் திமிர் பிடித்த அகந்தையை மக்கள் அடக்கும் நாள் மே 16; பெண் குலம் திரண்டு வந்து உனது மமதையை முடிக்கும் நாள் மே 16; தமிழ்ப் பெண் குலத்தின் சாபத்தைப் பெறுகிறாய் நீ. உன்னைப்போன்ற அகங்காரம் கொண்டவர்களை அடக்குவதுதான் இந்தத் தமிழ்ச் சீதை போன்றவர்களின் தலையாயப் பணி.

வளர்ச்சியைப் பற்றிப் பேசினால் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான வளர்ச்சியைப் பற்றிப் பேசு; முன்னோக்கிச் செல்லும் தமிழ்நாட்டைப் பின்னுக்கு இழுக்காதே. என்னைப் போன்ற இளம்பெண்களுக்கு எதிரான பகைச்சூழலை உண்டாக்காதே.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்