என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக நான் தவிர்த்த ஓர் விதை… விஜய்யை ரசித்து வாழ்த்திய இயக்குநர்

0
424

தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர் விஜய் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் 

இந்நிலையில் பிரபல இயக்குநரான பாரதிராஜா நடிகர் விஜய்க்கு உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இயக்குநர் பாரதிராஜா தனது டிவிட்டர் பக்கத்தில்  என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின், சொத்தாக உலகமே, கொண்டாப்படும் “விஜய்க்கு” இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும் நையாண்டி, நக்கலுக்கான அந்த , உடல் பாவனை நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக கோடிக் கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில், எல்லாசிறப்பும் பெற்று, நீடூழிவாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன் அன்புடன் பாரதிராஜா என பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here