என் உடலமைப்பை நானே வெறுக்கிறேன்… இலியானாவுக்கு வந்த புது வியாதி

0
222

இலியானா நடித்திருக்கும் (பேசியிருக்கும் என்பதே சரி) குறும்படத்தை பார்க்க நேர்ந்தால், இலியானாவுக்கு இப்படியொரு வியாதியா என்று அதிசயித்துப் போவீர்கள்.

ஜீன்ஸ் விளம்பரத்துக்காக தயாரிக்கப்பட்ட குறும்படத்தில் இலியானா பேசியிருக்கிறார். பிரபலங்கள் தங்களது பலவீனங்களை எதிர்கொண்டு எப்படி சாதித்தார்கள் என்பதை சொல்லும் தன்னம்பிக்கை படமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இலியானா தனக்கிருக்கும் வித்தியாசமான வியாதி குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அந்த ஜீன்ஸ் விளம்பரம் இதோ

Body dysmorphic disorder என்பதே அந்த வியாதியின் பெயர். இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் தங்கள் உடலமைப்பு மீது தாங்களே வெறுப்பும் எரிச்சலும் கொள்வார்கள். கண்ணாடியில் தங்களைப் பார்க்கையில், சே… இதென்ன இப்படியொரு உடம்பு என்று வெறுப்பு பொங்கிவரும்.

பருவம் எய்த பிறகு தன்னுடைய உடலமைப்பு குறித்து நிறைய கவலைப்பட்டதாகவும், தனது உடம்பை தானே வெறுத்ததாகவும், அந்த மன உளைச்சலில் சாதா உழன்று கொண்டிருந்ததாகவும் இலியானா பேசியுள்ளார். மூன்றாண்டுகளுக்கு முன்பே தனக்கிருப்பது Body dysmorphic disorder என்ற நோய் என்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. அப்போது உச்சக்கட்ட மன அழுத்தத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

முதலில் எந்தப் பிரச்சனையையும் ஆமாம் அப்படியொரு பிரச்சனை இருக்கிறது என்று ஒப்புக் கொண்டு தைரியமாக அதனை எதிர்கொள்ள வேண்டும் என்று இலியானா நம்பிக்கை தருகிறார். என்ன பிரச்சனை இருந்தாலும் தனி மனிதர்களால் அதனை தைரியமாக எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வரமுடியும் என்பதே இலியானா பேச்சின் சாரம்.

கண்டிப்பாக தனிநபர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்.

இதையும் படியுங்கள்: தமிழ் சினிமாவில் அரசியல் தலையீடு – அஜித்தை ரிப்பீட் அடித்த முருகதாஸ்

இதையும் படியுங்கள்: ஜக்கி வாசுதேவின் கார்களுக்காகவே 8 லட்சம் மரங்களை நட வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்