பெண்கள் எப்பொழுதும் தங்களுடைய உடலுக்காகவும், உடலின் அளவு, அதில் உள்ள ‘குறைபாடுகள்’ என மற்றவர்கள் எதை சொன்னாலும் அதற்காக மிகவும் வருத்தப்படுவார்கள். இந்தச் சமூகம் எப்படி ஒரு பெண் இருக்க வேண்டுமோ அப்படி இல்லையென்றால் அதற்காக மெனக்கெட்டு தன்னை மாற்றிக்கொள்வார்கள். பெண்களின் உடல் மென்மையாக, எதில் முடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மையான சமூகத்தின், ஆணாதிக்கம் உள்ள வெளியில் நினைப்பார்கள். ஆனால், இங்கே ஒரு பெண் தன் உடல் முழுவதும் உள்ள முடியை ஷேவ் செய்யாமல் எடுத்த செல்ஃபியை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு சபாஷ் போடுவோம்.

இதற்காக பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். அவரது பெயர் சுரேயா. இவருடைய பதிவு பெண்களின் உடலை கேலி செய்யும் எல்லோரையும் வாயை மூட வைத்து விடும்.

தங்கள் உடலை பற்றி தாழ்வு மனப்பான்மையுடன் உள்ள பெண்கள் பலர் சுரேயாவின் பதிவு தங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பதாக கூறியுள்ளனர்.

”நான் எவ்வளவு வெறுப்பை பலரிடத்தில் சம்பாதித்தாலும் அதே அளவிலான அன்பை நான் பெறுவேன். பெண்கள் தாங்கள் விரும்பியதை அப்படியே செய்ய வேண்டும். அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. உங்கள் உடம்பில் உள்ள முடியை ஷேவ் செய்ய வேண்டுமா? இல்லையா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பல பெண்கள் தங்கள் உடம்பை பற்றியே எப்பொழுதும் கவலைப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எதை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் கையில் தான் எல்லா வாய்ப்புக்களும் உள்ளன. என் அம்மாவிடம் நான் இதைப்பற்றி நிறைய பேசுவேன். அவரிடமிருந்துதான் இந்த எண்ணங்கள் எனக்கு தோன்றின.” ,என சுரேயா கூறியுள்ளார்.

இனிமேலாவது பெண்களின் உடம்பைப் பற்றி அவர்களை விட அதிகமாக யோசிப்பவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.