என்றும் இளமையுடன் இருக்க சோற்றுக்கற்றாழை சாப்பிடும் முறையும் அதன் பயன்களும்

தேவையானவை :

சோற்றுக்கற்றாழை

நாட்டு சர்க்கரை

செய்முறை :

சோற்றுக்கற்றாழை ஒரு மடல் எடுத்து மேல்தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக்கி பிறகு ஒரு மண் சட்டியில் தண்ணீர் ஊற்றி சோற்றுக்கற்றாழையை நன்றாக அலச வேண்டும். இது போல் 7 முறை நன்கு அலசி சுத்திப்படுத்திக்கொள்ளவும். பிறகு நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடவும்.

பயன்கள் :

இளமையை நீடிக்க செய்கிறது.

உடல் சூட்டை தணித்து ஆண்மையை அதிகரிக்க செய்கிறது.

கை, கால், கண், நீர் எரிச்சல் குணமாகும்.

மூல நோய் குணமாகும்.

மலச்சிக்கலை குணமாக்கும்.

நெஞ்செரிச்சலை குணமாக்கும்.