என்னை ‘Nominate’ செய்ததற்கு நன்றி’ – மகேஷ்பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்

0
244

மகேஷ் பாபுவின் பரிந்துரையை ஏற்ற ‘தளபதி’ விஜய் தனது வீட்டில் மரக்கன்றை நட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டார். அதனை ட்விட்டரில் பகிர்ந்த சில நிமிடங்களில் தனது கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தென்னிந்திய பொழுதுபோக்கு துறையில் மிகவும் பிரபலமான பல முன்னணி நடிகர் நடிகைகள் பசுமை இந்தியா சவால் (Green India Challenge) என்ற புதிய ஹாஷ்டேகுடன் தங்களது வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அதே நேரத்தில், ஒவ்வொருவரும் தனது சக நடிகர்கள் மற்றும் சினிமா சகோதரத்துவங்களுக்கு இந்த சவாலை ஏற்கும்படி பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சவால் இப்போது டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மூலமாக ‘தளபதி’ விஜய்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை விஜய்யின் ரசிகர்கள் அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், ட்விட்டரில் #ThalapathyVijay மற்றும் #GreenIndiaChallenge என்ற ஹாஷ்டேகுகள் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. 

மேலும் தற்போது மகேஷ் பாபு அவர்கள் இந்த சேலஞ்சை பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களும் விடுத்திருந்தார். இந்நிலையில் அவரும் தற்போது இந்த #GreenIndiaChallengeயினை ஏற்று மரக்கன்றுகள் நட்டு அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ரானா, ரித்திக் ரோஷன் மற்றும் தமன்னா ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here