அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க்கில் வசித்து வந்தார். திடீரென அந்த நகரத்தில் இருந்த தன் வீட்டை மாற்றிக் கொண்டு புளோரிடாவுக்கு குடிபெயர்ந்திருக்கிறார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட டிரம்ப், நியூ யார்க்கைத் தான் நேசிப்பதாகவும் ஆனால் அங்குள்ள மாகாணத் தலைவர்கள் தன்னை மோசமாக நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், “இப்போது உள்ள ஆளுநர் ஆண்ட்ரூ கோமோ மற்றும் மேயர் பில் டி பிளாசியோவின் ஆட்சியில் நியூயார்க் ஒருபோதும் பழையபடி சிறந்த நிலைக்கு வர முடியாது” என்று கூறியிருக்கிறார்.


இதனிடையே டிரம்ப் வீட்டை மாற்றியது தேர்தல் வரும்போது அவருக்குக் கைகொடுக்கும் என்று அந்நாட்டு அரசியல் வித்தகர்கள் கூறுகின்றனர்.

டிரம்ப் இடம் பெயர்ந்திருப்பது பற்றி நியூயார்க் மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கோமோவும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “போனது நல்லதுதான்.” என்று கிண்டல் செய்துள்ளார். மேலும், அவரை புளோரிடாவே வைத்துக் கொள்ளட்டும் எனவும் மகிழ்ச்சியோடுதெரிவித்துள்ளார் .

ஆளுநர் ஆண்ட்ரூ கோமோ மற்றும் மேயர் பில் டி பிளாசியோ இருவருமே எதிர் எதிர் தரப்பினர்தான் என்றாலும் டிரம்ப்பை விமர்சிப்பதில் இருவரும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர்.

நியூ யார்க் மாகாண அரசு பணக்காரர்களுக்கு 12.7 சதவீதம் மாகாண வருமான வரி விதிக்கிறது. ஆனால் புளோரிடாவில் மாகாண வருமான வரி கிடையாது. இதனால் பல பணக்காரர்களை அது ஈர்த்துள்ளது.




 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here