தன்னுடைய அனுமதியின்றி தான் இசையமைத்த பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, இசையமைப்பாளர் இளையராஜா சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள் : மகளிர் தினத்தைக் கொண்டாடும் கூகுள்

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் “தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக வந்துள்ளோம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இசையமைத்த பாடல்களைத் தன்னுடைய அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்றும், மீறி பாடினால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இளையராஜாவிடமிருந்து நோட்டீஸ் வந்தது என கூறினார். மேலும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் பாடகி சித்ராவிற்கும் இதே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : காதலர் தின கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்

இனிவரும் நிகழ்ச்சிகளில் இளையராஜா பாடல்களைப் பாட முடியாது என்பதற்கான காரணத்தை ரசிகர்கள் அறிந்து கொள்வதற்காக இதைத் தெரிவிப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருப்பதால், இனிமேல் அந்தப் பாடல்களை நிகழ்ச்சிகளில் பாடப்போவதாகவும் கூறியுள்ளார். மேலும் “இளையராஜா முன்னரே தெரிவித்து இருந்தால் அவரது பாடலை பாடாமல் இருந்திருப்பேன். தற்போது சட்டபூர்வமாக நோட்டீஸ் வந்துள்ளதால் அதை சட்டபூர்வமாக எதிர்கொள்வேன். இதனால் எங்களுக்குள் உள்ள நட்பில் எந்த கலங்கமும் ஏற்படாது” என்றும் தெரிவித்துள்ளார்.


இதையும் படியுங்கள் : உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி: வெண்கலம் வென்றார் பூஜா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்