சர்கார்’ பட விவகாரத்தில் என்னுடைய படம் என்பதற்காக அல்லாமல் எது சரியோ அதன்படி முடிவெடுங்கள் என்று விஜய் கூறினார் என்றும் தவறான நோக்கம் எதுவும் இல்லை, மனதளவில் நான் பாதிக்கப்பட்டாலும் நியாயம் இருப்பதால் இதில் இறங்கினேன் என்றும் மற்றபடி எந்த நோக்கமும் இல்லை என்றும் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ் செய்தியாளர்களிடம் பேசியது —-

”சினிமாவில் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம். தென்னிந்திய திரைக்கதையாசிரியர்கள் சங்கத்தில் முருகதாஸ், வருண் ராஜேந்திரன் இருவரும் உறுப்பினர்கள். அவர்களுக்குள் கதை சம்பந்தமாக சின்ன கருத்து வேறுபாடு வந்தது.

கள்ள ஓட்டு போடும் அநீதியை எதிர்த்துப் போராடும் கதாநாயகன் என்ற கருவை வைத்து சர்காரை ரிலீஸுக்கு கொண்டுவந்துள்ளார். ‘சர்கார்’ ரிலீஸுக்கு வரும்போது வருண் ராஜேந்திரன் 10 ஆண்டுகளாக திரைத்துறையில் இணை இயக்குநராக இருப்பவர். அவருக்கு செய்தித்தாள் மூலமாக கதையின் கரு என்ன என்பதை படித்து சங்கத்தில் தொடர்பு கொண்டார்.

நான் முருகதாஸிடம் முடிந்தவரையில் வெளியே கசப்பு இல்லாமல் பிரச்சினையைத் தீர்க்க முயன்றேன். ஆனால் முருகதாஸுக்கு வருத்தம், சார் நான் கஷ்டப்பட்டு தயார் செய்த கதை. இதில் எப்படி நான் அடுத்தவரைச் சேர்க்க முடியும் என கிரியேட்டராக அவரின் மனவருத்தம் இருந்தது.

இதே கருவை 10 ஆண்டுகளுக்கு முன் வருண் ராஜேந்திரன் சிந்தித்து எழுதியுள்ளார். அதைக் கொஞ்சம் பரிசீலியுங்கள் என சங்கத்தின் தலைவர் என்கிற முறையில் நான் தெரிவித்தேன். இல்லை சார் தப்பா பேசுவாங்க என்று முருகதாஸ் தெரிவித்தார்.

அதன்பின்னர் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவரும் 10 ஆண்டுகளாக சினிமாவில் வர வேண்டும் என்று கஷ்டப்படுகிறார். அவரும் உங்களைப்போலவே கள்ள ஓட்டு குறித்த கதைக் கருவை மனதில் வைத்து தயாரித்துள்ளதால் இரண்டு கருவும் ஒன்றாக இருப்பதால் நீங்கள் தாராளமாக அங்கீகாரம் கொடுக்க வேண்டும். நீங்கள் வளர்ந்த இயக்குநர், அவர் வளர்ந்துவரும் இயக்குநர். அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன்.

இது வழக்கெல்லாம் சென்று வாதாடும் அளவுக்குப் போக வேண்டுமா? என்று கேட்டிருந்தேன். ஆகவே, நீங்கள் இவ்வளவு சொல்வதாலும், பத்தாண்டுகள் அவர் சினிமா துறையில் உரிய அங்கீகாரத்திற்குப் போராடுவதாலும், கரு அவருடையதும் என்பதாலும் நான் டைட்டிலில் அங்கீகாரம் கொடுக்கிறேன் என முருகதாஸ் தெரிவித்தார். அதனால் பிரச்சினை சுமுகமாக முடிந்தது.

விஜய்க்கு என் மகன் ரசிகன் நான் எதிர்ப்பாக நிற்க வேண்டி இருந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் வருண் ராஜேந்திரன். அவரும் எதிர்ப்பாக நிற்க நேர்ந்தது. ஆனால், பிரச்சினை சுமுகமாக முடிந்ததில் எனக்கு மிகவும் சந்தோசம் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here