கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கடந்த வாரம் 75 வயதான சாதி பாய், என்ற மூதாட்டி மளிகை கடைக்கு சென்று பழைய ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அப்போது மளிகை கடைக்காரர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நாட்டில் சட்டம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: #demonetisation : எங்கும் வேலையில்லை; முடங்கும் ஜவுளி நிறுவனங்கள்

கேரளா மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தில் ஒரு சிறிய வீட்டில் தனியாக வசித்து வரும் சாதி பாய், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மாநில கால்நடைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல், தனது உறவினர்களுடனான தொடர்பையும் துண்டித்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: #Demonetisation : ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றி பேசும் “Shunyota”

அவர் தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்கூட பயன்படுத்துவது கிடையாது. அதுமட்டுமல்லாமல் இங்கு மின்சாரமும் கிடையாது அது எனக்கு தேவையும் இல்லை என்று கூறுகிறார். தொலைக்காட்சியை எப்படி உபயோகப்படுத்துவது என்றுகூட எனக்கு தெரியாது என்றும், என் வாழ்நாளில் ஒருபோதும் தொலைபேசியை உபயோகப்படுத்தியது இல்லை என்றும் கூறுகிறார். காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியில் செல்வாராம்.

இதையும் படியுங்கள்: #Demonetisation: உற்பத்திக்கு ஏற்ற விலை இல்லை; விவசாயிகள் வேதனை

கடந்த 2 மாதங்களாக அரசாங்கம் வழங்கிய மாத ஓய்வூதிய பணத்தை பயன்படுத்தியிருக்கிறார். தற்போது அனைத்து கடைகளும் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால் தனது வங்கி கணக்கு உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கிக்கு சென்று ஒரு பை நிறைய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். தற்போது பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான காலகெடு முடிந்துவிட்டதால் பணத்தை வாங்க வங்கி மறுத்துள்ளது.

kerala-1

அவரது கஷ்டத்தை புரிந்து கொண்ட வரபுழா பஞ்சாயத்து குழு இந்திய ரிசர்வ் வங்கியை தொடர்பு கொண்டு உதவி செய்ய முன்வந்தது ஆனால் சாதி பாய், அதை மறுத்துவிட்டார். காரணம் அவர் மாத ஓய்வூதியம் பெற்று வருகிறார். அவர் யாருடைய உதவியையும் விரும்பவில்லை. ஆனால் வங்கி அதிகாரிகள் தற்போது பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் என்று கூறினார்கள்.

இதையும் படியுங்கள்: #Demonetisation: இந்த மாதிரி ஒரு பஞ்சத்த நான் பாத்ததே கிடையாது

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை காவல் துறையினர் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் சாதி பாய் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 4 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். மேலும் அவருக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி தெரியாது என்பதால் அந்த பணம் குறித்து அவருக்கு அறிவுரை வழங்கி உதவி செய்ய வேண்டும் என வருமானவரி துறையினரிடம் கேட்டுள்ளார்கள்.

நன்றி : The Quint

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்