செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் என்ஜிகே படத்துக்கு க்ளீன் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் என்ஜிகே திரைப்படம் சென்ற தீபாவளிக்கே திரைக்கு வந்திருக்க வேண்டும் பல காரணங்களால் வெளியீட்டு தேதி தள்ளிப் போனது. தற்போது மே 31 படம் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். 

படம் திரைக்கு வருவதை முன்னிட்டு தணிக்கைக்குழுவுக்கு படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். 

என்ஜிகே படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பாலா சிங், பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இசை. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மே 31 படம் திரைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here