
படத்திலிருக்கும் ருக்கையா ஹாரிஸ் எழுதியது பின்வருமாறு:
மேற்குலகில் ஏராளமான இளம் பெண்கள் தங்களைப் பெண்ணியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். பெண்களின் சமூகப் பிரச்சினைகள் பற்றிய உரையாடல்கள் பல்கிப் பெருகுகின்றன. இந்த விவாதங்களில் முஸ்லிம் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. முஸ்லிம் பெண்களை ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்களாக மேற்குலகப் பெண்ணியவாதிகள் பார்ப்பதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது.
ஊடகங்களும் ஹிஜாபை ஆணாதிக்க ஒடுக்குமுறையின் உச்சகட்ட அடையாளமாகப் பார்க்கின்றன. ஹிஜாபைப் பற்றிய ஊடகங்களின் கருத்துக்கள் ஹிஜாபுடன் தொடர்பே இல்லாத அரசியல் நோக்கர்களின் கருத்துக்களிலிருந்து உருவாகின்றன. ஹிஜாபை அணிந்திருக்கிற எந்தவொரு பெண்ணின் உணர்வும் கருத்தும் இவர்களால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நான் பெண்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமென்று செயல்படுகிறவள். ஹிஜாப் என்பது என்னை விடுதலை செய்கிறது. உலகம் முழுவதும் பெண்களைப் பாலியல் பண்டமாக்குவதிலிருந்தும் பெண்களுக்கு நேர்கிற அவமதிப்புகளிலிருந்தும் ஹிஜாப் விடுதலை அளிக்கிறது.
உலகம் முழுவதும் வாழ்கிற சுமார் 100 கோடி முஸ்லிம் பெண்களுமே ஆண்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று சொல்வது எவ்வளவு அற்பத்தனமானது என்பதைச் சிந்தித்துப் பார்க்கிறேன். கணிசமான அளவுக்கு இளமையான, படித்த பெண்கள் ஹிஜாபைத் தம் வாழ்வின் பிரிக்கவியலாத பகுதியாகக் காண்கிறார்கள். இஸ்லாமும் ஹிஜாபும் இந்தப் பெண்களுக்கு உதவுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது. எனது ஆன்மிகப் பயணம் ஹிஜாபை அணியும்படி என்னைப் பண்படுத்தியது.
வடக்கு லண்டன் புறநகர்ப் பகுதியில் கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்தேன். இருந்தாலும் இஸ்லாத்தைப் பற்றி அறிமுகம் இல்லாதவளாகவே இருந்தேன். ஹிஜாப் போன்ற உடைகள் பெண்களைக் கட்டுப்படுத்துவதாகவும் அடக்கி ஒடுக்குவதாகவும் நினைத்தேன். எனது நம்பிக்கைக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தேன். 16 வயதானபோது என்னை அழகான பெண் என்று அனைவரும் வர்ணிக்கத்தக்க அழகைப் பெற்றிருந்தேன். நிறைய ஆண்களின் கவனம் கிடைத்தபோது நான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மதிக்கப்பட்டிருப்பதாகவும் நினைத்தேன்.
இதில் கிடைத்த உற்சாகத்தால் எனது ஆடைகளின் உயரம் குறைந்தது. எனது அலங்காரங்கள் அதிகமாகிக் கொண்டே வந்தன. ஒரு நாள் இரவு வெளியே பார்ட்டிக்குச் செல்வதற்கு மட்டும் இரண்டு நாட்கள் தயாராகும் அளவுக்கு மேக்-அப் அதிகமானது. ஒரு கட்டத்தில் இறுக்கமான ஓர் உடையைப் போட்டுக்கொண்டு ஏதோ ஒருவனின் கவனத்தை ஈர்ப்பதற்கு இவ்வளவு மெனெக்கெட வேண்டுமா என்கிற கேள்வி என்னுள் எழுந்தது. அதற்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் பயணம் செய்து ஒரு நம்பிக்கையுள்ள முஸ்லிமாக மாறினேன். முதல் முறையாக ஆண்களின் கண்கள் வழியே என்னைப் பார்ப்பதை நிறுத்தினேன். செயல்களின் வழி மனிதர்களை எடை போடுகிற அந்த இறைவனின் காவலுக்கு நான் மெல்ல மெல்ல திரும்பினேன்.
எனது உடலை எனது சம்மதமில்லாமல் உரித்துப் பார்ப்பதுபோல பார்க்கும் அந்தப் பார்வைகளின் குரூரத்தை உணர்ந்தேன். என்னில் ஒருவர் எதைப் பார்க்கலாம், எதைப் பார்க்கக்கூடாது என்பது எனது முழுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஹிஜாப் அணியும்போது எனது கவர்ச்சி மிக்க கூந்தலும் உடலும் மறைந்திருக்கிறது. எனது கட்டுப்பாட்டில் எனது அழகு இருக்கிறது. அதனை யாருக்கு வெளிப்படுத்துவது, யாருக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்பதை நானே நிர்ணயிக்க முடியும். எனது உடல், எனது உரிமை என்பது ஆழமாக மனதில் பதிந்தது. எனது செயல்பாட்டுக்காக, எனது குணத்துக்காக நான் பொதுவில் எடை போடப்பட வேண்டும். எனது உடலுக்காக அல்ல. எனது மேக்-அப்பும் அழகிய ஆடைகளும் எப்போதும் என்னுடனே இருக்கும். அது எனது மகிழ்ச்சிக்காக. நான் விரும்புகிறவர்களின் மகிழ்ச்சிக்காக. பொது இடத்தில் பண்டமாக்கப்படுவதற்காகவோ, மலிவான கவன ஈர்ப்புக்காகவோ எனது உடல் ஏங்காது. எனது ஹிஜாப். எனது பெருமை.
(நன்றி: ருக்கையா ஹாரிஸ், லண்டன்)
நிசா: நியாயமான விலையில் உலகத் தரம் வாய்ந்த புர்காக்கள்
நிசா (பெண்கள் என்று பொருள்) இஸ்லாமியப் பெண் ஆடைகளைத் தயார் செய்து விற்பனை செய்கிறது. ஏ.எம்.இக்பால், எம்.ஜாஹிர் ஹுஸைன், கே.ஷம்சு கனி ஆகியோர் இணைந்து இதனை ஓர் உலகளாவிய வணிக நிறுவனமாக வளர்த்தெடுத்து வருகிறார்கள். சென்னையில் மண்ணடி, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு ஆகிய இடங்களில் நமது விற்பனையகங்கள் உள்ளன.
உலகத் தரம் வாய்ந்த புர்காக்கள், அபயாக்கள், ஹிஜாப் முதலியவை நியாயமான விலையில் நம்மிடம் கிடைக்கின்றன.
NESA (meaning women) specializes in traditional Islamic Women wear. It was incorporated in Dec-2005 by Mr.A.M.Iqbal who is a partner in M.Gani & Co. During the expansion of NESA in 2007, M.Jahir Hussain partner in M/s. Mirage, M/s.Miracles, M/s.Cape Kazuals and GANI (The House of Fashion), K.Samsu Gani, Founder of Gani Shirts, joined as partners for merchandising and globalizing the products – TRADITIONAL WOMEN ISLAMIC WEAR SUCH AS BURKHA, ABAYA, HIJABS, SCARVES, SHAWLS, ETC.. Now, Nesa is gradually emerging as a global brand.
The best burqas, hijabs, shawls and headscarves in Asia are made by Nesa Burkha. After the coronavirus lockdown is over, visit our outlets in different parts of Chennai city.
Nesa, #69, Angappa Naicken Street, Mannady, Chennai – 600 001 Phone: +914442053841
Nesa, #5, Gangatheeswarar Koil Street, Purasawalkam, Chennai – 600 007 Phone: +914442041499
Nesa, #275, Pycrofts Road, Triplicane, Chennai – 600 005 Phone: +914442667119
Nesa, #4/3, Sardar Patel Road, Near Gokul Arcade, Adyar Signal, Chennai – 600 020 Phone: +914442667119
Business Enquiries: +91-98840 17119 / 98842 17119
Email: info@nesaburkha.com
Like us on Facebook here
Visit us on the web here
இதையும் படியுங்கள்: Nesa: World Class Hijab in your neighbourhood
(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)
(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)