குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு, தனது மகள் பாதுகாப்பான இந்தியாவில் வளர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக மிகப் பெரிய வன்முறை அரங்கேறியது. 2002ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு (19) பத்துக்கும் மேற்பட்ட இந்துத்துவா கும்பலால் கற்பழிக்கப்பட்டார். பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை இந்துத்துவா கும்பல் கொடூரமாகக் கொலை செய்தது. பில்கிஸ் பானுவின் மூன்றரை வயது பெண் குழந்தையையும் அந்தக் கும்பல் கொலை செய்தது.

மேலும் பில்கிஸ் பானுவின் குடும்பத்திலிருந்த மற்ற பெண்களையும் கற்பழித்து, கொடூரமாக இந்துத்துவா கும்பல் கொலை செய்தது. இதில் பில்கிஸ் பானுவைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டன்ர். இது தொடர்பான வழக்கில், மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இதையும் படியுங்கள் : தமிழக அரசையும் மிரட்டுகிறதா பாஜக?

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பில்கிஸ் பானு, தான் அரசியலமைப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கை உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர், இந்த வழக்கில் நீதியை மட்டுமே எதிர்பார்த்ததாகவும், யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கில்லை என்றும் தெரிவித்துள்ளார். தனது மகள் பாதுகாப்பான இந்தியாவில் வளர வேண்டும் என்றும், தனது மகள் வழக்கறிஞராக விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல் பேசும்போது, “பசு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பசுக் காவலர்களால் எனது குடும்ப தொழிலான கால்நடை தொழிலுக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே வருமானம் வரும் புதிய வேலையை நான் தேர்வு செய்யவேண்டும்” என்றார்.

இதையும் படியுங்கள் : இந்திய சினிமாவில் பாகுபலி ஏன் முக்கியமான திரைப்படம்? – ஓர் அலசல்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்