அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட புதிய சிலை ஜெயலலிதாபோல் இல்லை என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆனால் இந்த சிலை, ஜெயலலிதாபோல் இல்லை என சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுவதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான் ஜெயலலிதாவின் புதிய சிலையை விமர்சிக்கும் எனவும் ஆவேசத்துடன் கூறியுள்ளார். அதேபோன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயலலிதாவின் சிலையை விமர்சிப்பவர்கள் அவருடைய உண்மையான விசுவாசிகள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here