எந்த ஒரு கணக்கின் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்: முடக்கப்பட்டது கங்கனாவின் டிவிட்டர் பக்கம்

In a now-deleted tweet on the makers of "Tandav", the actor had said that it was "time to take their heads off".

0
234

சைஃப் அலி கான்,டிம்பிள்கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘தாண்டவ்’, கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியானது. 

மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்து கடவுள்களை அவதூறாக சித்தரித்து வெளியான தாண்டவ் வெப் சீரீஸ் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.

இந்த வெப் சீரீஸுக்கு எதிராக பல எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் பல அரசியல் தலைவர்கள் அதை தடை செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ‘தாண்டவ்’ வெப் சீரிஸை அமேசான் தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை முதல் விவசாயிகள் போராட்டம் வரை அனைத்து விவகாராங்களிலும் கருத்து தெரிவித்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நடிகை கங்கனா ரனாவத் ‘தாண்டவ்’ விவகாரத்திலும் கருத்து தெரிவித்தார்.

வழக்கம்போலவே அவர் கூறிய கருத்துக்கள் வன்முறைய தூண்டும் விதமாக இருப்பதாக பலரும் விமர்சித்தனர். உடனடியாக அப்பதிவை கங்கனா தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார். எனினும் அந்த பதிவின் ஸ்க்ரீன்ஷாட் படத்தை அனைவரும் பகிர்ந்து வந்ததால் அது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஜன.20) கங்கனாவால் எந்த ஒரு பதிவோ பின்னூட்டமோ இடாதவகையில் அவரது டிவிட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கியது டிவிட்டர் நிர்வாகம்.இதற்கு கங்கனாவின் ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

கங்கனாவின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து டிவிட்டர் நிர்வாக அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

டிவிட்டர் விதிமுறைகளை மீறும் எந்த ஒரு கணக்கின் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எங்கள் சேவையில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். எனினும் எங்களுடைய கொள்கையின்படி எந்தவொரு தனிநபரரையோ அல்லது பிற மக்களையோ குறித்தவைத்து தாக்குதலில் யாரும் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு டிவிட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

தற்காலிக முடக்கம் முடிந்ததும் கங்கனா டிவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக்கை குறிப்பிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில்,‘தலையை வெட்டுவது என்பது ஒரு சொல்லடை. அதற்கு திட்டுவது என்று அர்த்தம் என்பதை உங்கள் முட்டாள் பிரதிநிதிகளுக்கு புரியவையுங்கள். உண்மையில் அச்சுறுத்தும் நபர்களையும், தினமும் பிரதமர், உள்துறை அமைச்சர், துறவிகள்,பிராமணர்கள் சாக வேண்டும் என்று விரும்புபவர்கள் மீதும் இதே போல நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here