’எல்லைப் பகுதி பதற்றமாகத் தான் உள்ளது; ஆனால் குடும்பங்களை ஒற்றுமையாக வைக்க விரும்புகிறோம்’ என்றார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் .

சட்டத்துக்கு புறம்பாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தவர்களை குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள் என தனித்தனியே பிரித்து காவலில் வைக்குமாறு பிறப்பித்த உத்தரவை நட்பு நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக நிறுத்திவைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

சட்டத்தைத் தவறாக காரணம் காட்டி குடும்பங்களைப் பிரிப்பது தவிற வேறு வழியில்லை எனக் கூறி வந்த டொனால்ட் டிரம்ப் தற்போது தனது நிலையை மாற்றிக்கொண்டார்.

சட்டத்திற்கு புறம்பாக எல்லை தாண்டும் வயது வந்தவர்களை குற்றவாளிகளாகக் கருதும் சகிப்புத்தன்மையற்ற கொள்கையை இந்த உத்தரவு பாதிக்கவில்லை. ஆனால் அடுத்த சில வாரங்களுக்காவது காவலில்இருக்கும் குடும்பங்கள் ஒன்றாக இருக்க வழிசெய்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி தங்குமிடத்திற்கு ஏற்பாடு செய்ய பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்தப்படும். இக்கொள்கை அமலானது முதல் குடும்பத்திடமிருந்து பிரிக்கப்பட்ட 2,300 குழந்தைகளுடைய நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. சமீபகாலமாக வெளிவரும் எல்லையில் சிறைபடுத்தப்பட்ட குழந்தைகளின் நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏங்கி குழந்தைகள் அழும் ஒலி நாடாக்கள் ஆகியவை நீதியை கேள்விக்குள்ளாக்கி கோபத்தை கிளப்பியுள்ளதோடு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் குடியரசு கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும்
எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

’இது ஒரு தற்காலிக நடவடிக்கை’ புதன்கிழமை வரையில் அதிபரிலிருந்து, உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கெர்ஸ்ட்ஜென் நீல்சென் மற்றும் பிற அதிகாரிகள் வரை புதிய சட்டம் பிறப்பித்தால் மட்டுமே இந்நடைமுறையை மாற்ற முடியும் எனக் கூறிவந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் தனது ஒரு கையெழுத்தால் இதை மாற்ற முடியும் என ஜனநாயக கட்சி கூறியது. தற்போது அதிபர் அதைத் தான் செய்துள்ளார்.

”நாம் வலிமையான, மிக வலிமையான எல்லைகளை உருவாக்கப்போகிறோம், ஆனால் குடும்பங்களை ஒன்றாக வைக்கப்போகிறோம்” எனக் கூறிய டொனால்ட் டிரம்ப் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கும் காட்சியும் உணர்வும் தனக்கு பிடிக்கவில்லை என்றார்.

முந்தைய ஒரு தீர்மானத்தில் எல்லையில் பிடிபட்ட சிறார்களை நடத்தும் முறை மற்றும் விடுதலை செய்தல் குறித்த விதிகளின் படி குடும்பங்களை 20 நாட்களுக்கு மேல் சிறையில் வைக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த சட்டத்துறை அதிகாரி ஒருவர் அதில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறினார்.

இது ஒரு தற்காலிக நடவடிக்கை” என தலைமை அரசு வழக்குரைஞருக்கான ஆலோசகர் ஜீன் ஹேமில்டன் கூறினார். விசாரணை முடியும் வரை குடும்பங்களை காவலில் வைப்பதற்கு வழிசெய்யும் ஃப்ளோரஸ் தீர்மானத்துக்கு எதிராக நீதி வழக்குரைஞர்கள் வழக்கு தொடர முடிவு செய்தனர்.

புதிய பிரச்சனைகள் : டிரம்ப்பின் உத்தரவு புதிய பிரச்சனைகளை உருவக்கக்கூடும் எனவும் புதிய சட்டப் போராட்டங்களுக்கு வித்திடும் எனவும் கருதலாம். காவலில் வைப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் சட்டரீதியாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்த தெளிவு இல்லை.

குழந்தைகளின் நலனைக்கருதி அவர்களை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கவும் வழிசெய்யும். இவ்விவகாரம் தொடர்பாக கிளம்பியுள்ள எழுச்சியை கட்டுப்படுத்த இந்த உத்தரவு எந்த வகையிலும் உதவவில்லை. அலபாமாவைச் சேர்ந்த தெற்கு வறுமை சட்ட மையம் எதிர்பார்த்த தூரத்திற்கு இந்த உத்தரவு செல்லவில்லை என தெரிவித்துள்ளது.

டிரம்ப் குடும்பத்தின் தலையீடு : இவ்விவகாரத்தில் டிரம்ப் குடும்பத்தின் தலையீடு பங்குவகித்துள்ளது. குடும்பங்களை ஒன்றாக வைக்க சட்டமன்றத்தின் ஒப்புதலோடோ அல்லது தனிச்சையாகவோ ஆவணம் செய்ய அதிபரை மெலேனியா டிரம்ப் கேட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மகள் இவாங்கா டிரம்ப் “குடும்பத்தைப் பிரிப்பதைத் தவிர்க்க அமெரிக்க அதிபர் எடுத்துள்ள நடவக்கைக்கு நன்றி ” என டிவிட்டரில்
பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் நீல்சன் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேபிடல் ஹில் குறித்து விளக்கம் அளித்தார். நிலுவையிலுள்ள குடியேற்ற சட்டம் தொடர்பாக சம்பத்தப்பட்டவர்கள் டிரம்பை சந்திக்க வெள்ளை
மாளிகை சென்றனர். ராணுவத் தளங்களில் சிறைவைக்கும் வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வு டெக்ஸாஸில் ஏற்கனவே நடந்தது. வியாழனன்று அர்கான்ஸாஸில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ’இதற்கு முடிவே கிடையாது!’
நீல்சனுக்கு நெருக்கமான அடையாளம் சொல்ல விரும்பாத இருவர் குடும்பங்களை ஒன்றாக வைக்கும் இந்த உத்தரவுக்கு பின்னால் இருந்த சக்தி மெலேனியா டிரம்ப் தான் எனக்கூறினர்.

நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு காரணமாக பார்க்கப்படும் நீல்சன் இவ்விவகாரத்தில் சட்டமன்றத்தின் மீது நம்பிக்கை குறைவாக இருந்தார். செவ்வாய்க்கிழமை ஒரு உணவகத்தில் போராட்டக்காரர்களால் சூழப்பட்டார்.வீட்டினருகிலும் போராட்டக்காரர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உத்தரவு பிறப்பிக்கும் முன் புதன்கிழமை “இது ஜனநாயகக் கட்சியினரின் தோல்வி. ஒரு நல்ல குடியேற்ற சட்டத்தை அமல்படுத்த அவர்கள் ஆதரவளிக்கமாட்டார்கள். அவர்களுக்கு கொடூரமான குற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மூடப்படாத எல்லைகள் தான் வேண்டும். ஆனால் நான் ஒரு விஷயத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன் – இதற்கு முடிவே கிடையாது!” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்ற மாதம் அமல்படுத்தப்பட்ட சகிப்புத்தன்மையற்ற கொள்கை வயது வந்தோரை அமெரிக்க மார்ஷல் சேவைக்கு அனுப்பபடுகின்றனர். குழந்தைகள் பலர் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 2,300 சிறார்கள் குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்.
இக்கொள்கை முடிவின் படி மே 5 முதல் ஜூன் 9 வரை 2,300 சிறுவர்கள் அவர்கள் குடும்பங்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

1980இல் தொடரப்பட்ட வழக்கில் இடம்பெற்ற பெண்ணின் பெயரைக் கொண்ட ஃப்ளோரஸ் தீர்மானம், தங்கள் விருப்பத்திற்கு இணங்க அரசாங்கம் தனது காவலிலிருந்து குழந்தைகளை அவர்களது பெற்றோர் அல்லது காப்பாளரிடம் ஒப்படைக்க வழிசெய்கிறது. பெற்றோர் அல்லது காப்பாளர் இல்லையெனில் குறைவான கட்டுப்பாடுகளோடு கூடிய ஏற்பாட்டை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

குழந்தை பெற்றோருடன் இருக்கக்கூடாத நிலையில் இருந்தாலோ, தனக்கும் தன்னைச் சுற்றியிருப்பவருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருந்தாலோ, பெற்றோர் குழந்தையை விடுதலை செய்ய மறுப்பு தெரிவித்தாலோ ஒழிய பெற்றோருடன் குழந்தைகளை சிறைவைக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை தடுப்பதற்கு வேறு எதுவுமில்லை என
வழக்குரைஞர் பீட்டர் ஷேய் புதன்கிழமை சொன்னார். குழந்தைகளோடு சேர்த்துவைக்கும் முன்னதாக பெற்றோர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதை நீதிமன்றம் தடுக்குமா எனவும் குடும்பங்களை சேர்த்துவைக்க டிரம்ப் நிர்வாகத்தை நிர்பந்திக்குமா எனவும் தான் ஆராய்ந்துக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

’கனடாவில் நாங்கள் இப்படிச் செய்வது கிடையாது’

2015இல் லாஸ் ஏஞ்சலஸ்ஸில் நீதிபதி ஒருவர் அமெரிக்காவுக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கும் தனியாக வரும் குழதைகளுக்கும் இது பொருந்தும் என்ற தீர்மானத்தின் விதிகளை விரிவாக்கினார். சமீபத்திய பிற தீர்ப்புகளிலும் பிணை விசாரணைகளில் குழந்தைகளின் வாதத்தை கேட்கவும் எல்லைப் படையின் குறுகிய கால சிறைப்படுத்துதல் வசதிகளை
மேம்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2016இல், 9வது அமெரிக்க வட்டார மேல்முறையீடு நீதிமன்றம் பெற்றோருடன் வந்த சிறார் குடியேறிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என தீர்ப்பளித்தது. பெற்றோர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. பெற்றோர்களை குழந்தைகளிடம் இருந்து பிரித்து சிறைவைக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக இந்த வாரத்தில் கருத்து தெரிவிக்க மறுத்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமையன்று தனது அழுத்தமான கண்டனத்தை தெரிவித்தார்.“அமெரிக்காவில் தற்போது நடந்துகொண்டிருப்பது சரியல்ல” என்று கூறிய அவர் “இப்பிரச்சனையில் சிக்கியுள்ள குடும்பங்களின் நிலையை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. நிச்சயமாக கனடாவில் நாங்கள் இப்படிச்செய்வது கிடையாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here