டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதிரி, பகவத் கிஷன் ராவ், மற்றும் மத்திய நிதித் துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய கூட்டத்தில் ஜவுளி துறையின் ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக நேற்றைய தினம் மத்திய பட்ஜெட் தொடர்பாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய கூட்டத்தில் ஜவுளித் துறையின் ஜிஎஸ்டி உயர்விற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்திலும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதுகுறித்து விரிவாக வலியுறுத்தினார். மேலும் மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பு சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய பல்வேறு மாற்றங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : 👇‘ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு நிறுத்திவைக்கப்படுகிறது’ என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி உயர்வு நாளை அமலாக இருந்த நிலையில் இன்று அதை தள்ளிவைத்தது ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி 45வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜவுளிப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய விலையானது வரும் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது இதுதொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகரும், முன்னாள் நிதித்துறை அமைச்சரும், பொருளாதார நிபுணருமான அமித் மித்ரா கண்டனம் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் அமித் மித்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் , 2022 ஜனவரி ஒன்றாம் தேதி மற்றொரு பெரிய தவறை செய்வதற்கு மோடி அரசு காத்திருக்கிறது. அதாவது, ஜவுளித்துறையின் ஜி.எஸ்.டியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : 👇இதனால் பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். ஒரு லட்சம் ஜவுளி யூனிட்கள் மூடப்படும். எனவே ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை உடனடியாக பிரதமர் மோடி கூட்ட வேண்டும். கோடிக்கணக்கான சாமானிய மக்களின் மீது தொங்கி கொண்டிருக்கும் கத்தி விழுவதற்குள் ஜி.எஸ்.டி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.