“எதிர்பாராமல் வந்து எங்கள் வேதனையில் பங்கு கொண்ட மகன்” விஜய் குறித்து உயிரிழந்த ஸ்னோலினின் தாய்

0
659

[vc_facebook type=”standard”][vc_tweetmeme type=”horizontal”]

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.
மிகவும் எளிமையாக வந்து எங்களது கஷ்டத்திலும், வேதனையிலும் பங்கெடுத்து கொண்டார் இந்த மகன் என்று நடிகர் விஜய்யின் வருகை குறித்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலினின் தாய் தெரிவித்திருக்கிறார்.

மே 22-ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடிய போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் அரசியல் தலைவர்கள் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், நடிகர் விஜய் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

நடிகர் விஜய் அதிகாலை 1.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில், துப்பாக்கிச் சூட்டில் பலியான கிளாட்சன், ஜான்சி, ஸ்னோலின் ஆகியோரது வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் .

விஜய்யின் வருகை குறித்து ஸ்னோலினின் தாயார் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறும்போது,

”நாங்கள் எல்லோரும் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருந்தோம் , மகள் ஸ்னோலினை நினைத்து வேதனைபட்டு கொண்டிருந்தோம் . . அப்போது இரண்டு பைக்குகள் வந்தன. யாரென்று பார்த்தப்போது விஜய் வந்து கொண்டிருந்தார். வீட்டினுள் வந்த விஜய் எங்களுடன் அமர்ந்து எங்களது அனுதாபத்தில் பங்கெடுத்தார். வேதனைபட்டுட்டு போனார் . நேரம் பிந்தி வந்ததற்கு தவராக நினைக்காதிக்காதீங்க, மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். மிகவும் எளிமையாக வந்து எங்களது கஷ்டத்திலும், வேதனையில் பங்கெடுத்து போய்விட்டார் இந்த மகன்” என்று கூறினார்

அந்த வீடியோ : https://youtu.be/JjcyMpGynAQ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here