2019 மக்களவைத் தேர்தலில் பல நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்து காணப்படுகிறது . ஒரே ஒரு விசயம் என்னவென்றால் 2019 தேர்தலில் எந்த ஒரு அலையும் வீசப்போவதில்லை. பிரதமர் மோடிக்கு ஆதரவும் இருக்கபோவதில்லை அல்லது மோடிக்கு எதிரான கடுங்கோபமும் இருக்கபோவதில்லை. இதேபோன்ற நிலையுடன்தான் காங்கிரஸ் 2014 மக்களவைத் தேர்தலை சந்தித்தது.

பொருளாதார கொள்கைகளில் மோடி அரசு மீது மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். வேலையின்மையும் , விவசாயிகளின் துயரங்களும் மோடி அரசு மீது மக்கள் கோபம் கொள்ள முக்கியமான காரணங்கள். இவை தேர்தலில் பெரும் பின்னடவை தரக்கூடியவை. மோடி அரசு தனது இடைக்கால பட்ஜெட்டில் நலத்திட்டங்களை அறிவித்து நிலைமையை சரிசெய்ய முயற்சி செய்திருக்கிறது. தன்னுடைய ஆட்சியின் மோசமான பொருளாதார நிலைமை மக்களிடம் போய்சேராமல் பார்த்து கொள்ள மோடி அரசு திசை திருப்புதல் எனும் பாணியைக் கையிலெடுத்திருக்கிறது . இது ஒரு வகையான தேர்தல் வியூகம். இந்துத்வா மற்றும் ஊழலை கையில் எடுத்துக் கொண்டு மக்களை திசைதிருப்புகிறது.

மேற்கு வங்கத்தில் ஷரதா சிட் ஃபண்ட் ஊழல் வழக்கில் சிபிஐ அதிரடி காட்ட முயல்வதும் , பண மோசடி புகாரில் ராபர்ட் வத்ராவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியதும் பாஜகவின் திசை திருப்புதல் நாடகமே. அதாவது பாஜக தான் செய்த தவறை மறைக்க எல்லோரும் ஊழல்வாதிகள் என்று மக்களுக்கு எடுத்து கூற முற்படுகிறது. ஆனால், இதை மோடி அரசு செயல்படுத்திய நேரம் முற்றிலும் தவறானது என்பதுதான் பிரச்சனை.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஷரதா சிட் ஃபண்ட் வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை என்று சிபிஐ வாதிடுவது சரியே. ஆனால், அந்த உச்சநீதிமன்ற உத்தரவு 2014இல் பிறப்பிக்கப்பட்டது. இதில் இருந்தே சிபிஐ-யின் (மோடி அரசின்) கபட நாடகம் வெளிப்படுகிறது.

ஷரதா சிட் ஃபண்ட் வழக்கில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக விசாரணை எதுவும் நடக்கவில்லை . அந்த வழக்கில்முக்கிய குற்றவாளியான முகுல் ராய் திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த பிறகு அவர் மீது இருத ஊழல் குற்றச்சாட்டுகள் கிடப்பில் போடப்பட்டது. இரண்டு வருடங்களாக விசாரிக்கப்படாமல் இருந்த வழக்கின் கோப்புகளை திடீரென எடுத்து, வேலைகளை துரிதப்படுத்துவதிலிருந்தே பாஜக எதிர்க்கட்சிகளை எவ்வாறு தாக்குகிறது என்பதை கண்டுகொள்ள முடிகிறது.

மம்தா பானர்ஜி மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது காவல் துறை அதிகாரிகள் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டது சரியானது அல்ல . ஆனால், அரசியல் மயமாக்கப்படுவதாக மேற்கு வங்கக் காவல்துறை மீது குற்றம்சாட்டும் பட்சத்தில், சிபிஐ மீதும் குற்றச்சாட்டுகள் வைப்பது அவசியமாகிறது . சிபிஐ -யை அரசியல் பழிவாங்கலுக்காக பாஜக பயன்படுத்துகிறது . அரசியல் பழிவாங்கலுக்காக சிபியாஇ பயன்படுத்தும் பாஜகவால் உண்மையான வழக்கை உருவாக்குவது என்பது மிகவும் கடினம்.

ராபர்ட் வத்ரா விவகாரத்திலும் இதே தவறைத்தான் பாஜக செய்கிறது . 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி சோனியா காந்தி குடும்பத்தையும், பிரியங்கா காந்தியின் கணவரையும் கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மோடி. காங்கிரஸை கலாய்க்கும்போது ‘மருமகன்’ எனும் சொல்லை அடிக்கடி பயன்படுத்த அவர் தவறவில்லை.

அப்போது வத்ரா மீது மக்களிடம் அனுதாபம் அவ்வளவாக இல்லை. மோடி அரசின் துவக்க ஆண்டுகளில் வத்ராவை விசாரித்திருந்தால் அரசியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்கில் வத்ரா மீது குற்றம்சாட்டப்பட்டப்போது, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகதான் ஆட்சியில் இருந்தது. எனினும், இரு மாநிலங்களுமே பல ஆண்டுகளாக வத்ரா மீதான வழக்கை முடிவுக்குக் கொண்டுவரவில்லை.

லண்டனில் இருக்கும் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியுடன் ராப்ர்ட் வத்ராவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அங்கே பினாமி பெயரில் சொத்து இருப்பதாகவும் வத்ரா மீது எழுந்த புகார்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டவை. இது தொடர்பான செய்திகள் 2016இல் செய்தித் தொலைக்காட்சிகளில் வெளியாகின. எனவே, வலுவான ஆதாரங்கள் இருக்குமானால்,இவ்வளவு காலமாக பாஜக அரசும், விசாரணை அமைப்புகளும் என்ன செய்துகொண்டிருந்தன?

இப்போது வத்ரா மீது விசாரணைகளை ஏவி விட்டிருப்பதை பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்துடன் பொது மக்கள் தொடர்புபடுத்தி பார்ப்பார்கள் என்பது உண்மையே . உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி தனது கணவருடன் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வருகிறார். பின்னர், அங்கிருந்து தனது கட்சியின் தலைமையகத்துக்கு செல்கிறார்.

இந்த விவகாரத்தில் பிரியங்கா மக்களுக்கு கூறுவது ஒன்றே ஒன்றுதான். அது இந்த விவகாரத்தை எதிர்கொள்வதில் தானோ அல்லது காங்கிரஸ் கட்சியோ எந்த விதத்திலும் வெட்கப்படவில்லை என்பதுதான். பிரியங்காவின் இந்த செயல் மோடி அரசுக்கு எதிராகச் சவால்விட்டதேயன்றி வேறேதுவுமில்லை. தன் கணவருக்கும் தன் குடும்பத்துக்கும் தான் உறுதுணையாக நிற்பதாக ஊடகங்களிடம் தெரிவிக்கிறார். கோடிக்கணக்கான இந்தியர்கள் பிரியங்கா இடத்தில் இருக்க நேர்ந்தால் அதையேதான் சொல்லியிருப்பார்கள்.

பிரியங்கா காந்தி அரசியல் பதவியில் பொறுப்பேற்கும் அதே வாரத்தில், வத்ராவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்ததால் பாஜக போட்ட அரசியல் கணக்கு தவறாகிவிட்டது . இவ்வாறு உள்நோக்கதோட பாஜக செயல்பட்ட விதம் சந்தேகம் கொள்ள வைத்தது மேலும் பாஜகவினரது பயத்தையும் காட்டிவிட்டது .

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது உறுதியான, போதுமான ஆதாரங்கள் ஏதுமின்றி சிபிஐ அல்லது அமலாக்க துறை வழக்கைக் கட்டமைக்க முயற்சிக்கிறது . அதுவும் தேர்தல் நடக்க ஒரு மாதமே இருக்கும் நிலையில் இவ்வாறு செய்ய முற்படுகிறது பாஜக அரசு. பாஜக தான் எய்த அம்புகளால் தானே தாக்கப்படும் அபாயத்தில் சிக்கியிருக்கிறது.

சிபிஐ அமைப்போ அல்லது அமலாக்கத் துறையோ வழக்கைக் கட்டமைக்க முயற்சி செய்வது நடக்கிறது. இவை அனைத்துமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அரங்கேறுகின்றன. பாஜக தான் எய்த அம்புகளால் தானே தாக்கப்படும் அபாயத்தில் சிக்கியிருக்கிறது. இந்த வழக்குகள் மீது ஏன் இத்தனை ஆண்டுகளும் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக ஆதரவாளர்கள் காரணம் தெரியாமல் குழம்பிபோய் இருக்கின்றனர்.

மோடியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் போது ஊழலுக்கு எதிராக இவ்வாறு செயல்படுவது சாமர்த்தியமான அரசியல் அல்ல. மோடி அரசின் இத்தைகைய செயல்கள் எதிரணிக்குச் சாதகமாகிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

Barkha Dutt

Courtesy : The Hindustan Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here