எதிர்க்கட்சிகளை குறைகூறிகொண்டே இருப்பதால்தான் ஒரு தீர்வும் அவர்களுக்கு கிடைக்கவில்லை – நிர்மலா சீதாரமனுக்கு பதிலடி கொடுத்த மன்மோகன்

0
203

இந்தியப் பொருளாதாரம் பற்றி மத்திய அரசுக்கும், காங்கிரஸுக்கும் தொடர்ந்து வாதம் நடந்து வரும் நிலையில்  நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி அடுக்கடுக்காக விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

முன்னதாக நிர்மலா சீதாராமன், “ரகுராம் ராஜன், இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி கருத்து கூறி வருகிறார். நானும் ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராகவும் இருந்தபோதுதான் இந்திய பொதுத் துறை வங்கிகள் மிகவும் சிரமப்பட்டன” என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் செய்தியாளர்களை, பிஎம்சி வங்கியில் முதலீடு செய்தவர்களை , சமானிய மக்களை,  தொழில் பிரதிநிதிகளைச் சந்தித்த மன்மோகன் சிங் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

பொருளாதாரத்தை சீர் செய்ய வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அதன் சரியான நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், தற்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறது மத்திய அரசு. ஆகவேதான், அதை சரிசெய்ய இவர்களுக்கு ஒரு தீர்வும் எதுவும் கிடைக்கவில்லை என்று மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். 

 தற்போதைய அரசானது எதிர்க்கட்சியினர் மீதும் எதிராளிகள் மீதும் குறை கூறுவதை நிறுத்த வேண்டும்.  அவ்வாறு குறை கூறி கொண்டிருப்பது விவாதத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் தீர்வாக இருக்க முடியாது 

“2018ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார மதிப்பு 2.7 லட்சம் கோடி டாலராக இருந்தது. அதை 2024ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த இலக்கு வைத்துள்ளனர். அந்த இலக்கை அடைவதற்குக் குறைந்தது 10 முதல் 12 சதவீத வருடாந்திர வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்க வேண்டும் என்றவர், மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சியைத்தான் சந்தித்து வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் மதிப்பை அடையச் சாத்தியமே இல்லை என்று மன்மோகன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியில்  இருப்பதால் மிகவும் பாதிக்கப்பட்டது மகாராஷ்டிர மாநிலம் தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் இங்கு மூடப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

பாஜக – ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்து காங்கிரசுக்கு தேசபக்தி சான்றீதழ் ஒன்றூம் தேவையில்லை. மக்களிடமிருந்து கிடைப்பதே போதுமானது 

முந்நாள் மத்திய அமைச்சர் பிராபுல் பட்டேலை அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக கூறீயிருப்பது குறித்து பேசிய மன்மோகன் சிங் அரசியல் பழிவாங்கலுக்காக செய்கிறார்கள் என்றார். 

வீர் சவர்க்கருக்கு பாரத ரத்னா குறித்து கேட்ட போது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவரது நினைவாக ஸ்டாம்ப் வெளியிட்டார். அவருக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆனால் அவரது இந்துத்துவா கொள்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here