எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரப் பசி, பாஜக ஆட்சியை பொறுக்க முடியவில்லை’ – மோடி

0
293

https://youtu.be/mzh8rCXWy9s

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்ற மக்களவையில் விவாதிக்கப்பட்டது. பிரதமரை ராகுல் காந்தி கட்டி அணைத்தது சரியல்ல என சபாநாயகர் கூறினார்.

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக சில மாதங்கள் முன்பு வரை கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருகிறது.

நாட்டில் எப்போதும் நிலையற்ற தன்மையை வைக்கவே காங்கிரஸ் விரும்புகிறது என நரேந்திர மோடி தனது பேச்சில் குற்றம் சாட்டினார். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தனது அரசு தோற்கடிக்கும் என்பதை தனது பேச்சில் உறுதிபடக் கூறினார் மோடி. ஆந்திர மக்களை மதித்து தனது அரசு பணிகளை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோடி தொடர்ந்து பேசுகையில், ‘2024-ஆம் ஆண்டும் நீங்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர இறைவனை வேண்டுகிறேன். ரபேல் உள்பட எல்லா ஒப்பந்தங்களும் வெளிப்படையாக செய்யப்பட்டிருக்கின்றன. கத்திக் கத்திப் பேசுவதால் எல்லாம் உண்மை ஆகிவிடாது’ என்றார்.

காங்கிரஸுக்கு தன் மீது நம்பிக்கை கிடையாது. அதனால்தான் அரசை நம்பவில்லை என்றும் மோடி குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரப் பசி. பாஜக ஆட்சியை பொறுக்க முடியவில்லை என்றும் மோடி குறிப்பிட்டார். தனது அரசு மக்களுக்கு செய்துள்ள செய்துள்ள மின் இணைப்பு, வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்களையும் மோடி பட்டியலிட்டார்.

‘எதிர்கட்சிகள் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வருகின்றன. எதிர்மறை அரசியலை அவை செய்கின்றன. நாட்டின் வளர்ச்சி பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நாட்டில் பலர் பிரதமர் ஆக ஆசைப்படுகிறார்கள். ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்காக இதன் மூலமாக எதிர்க்கட்சிகளை இணைக்க விரும்புகிறார்’ என மோடி குறிப்பிட்டார்.

முந்தைய ஆட்சியைக் காட்டிலும் வளர்ச்சித் திட்டங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் பாதுகாப்புக்கு நிறையத் திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் வைத்திருந்த கடனை அடைத்திருக்கிறோம்.

முன்பு இருந்த யூரியா பற்றாக்குறை இப்போது கிடையாது, பயிர் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம், தொழில் தொடங்க 13 கோடி இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது, கடந்த 70 ஆண்டுகளாக இருளில் இருந்த 18,000 கிராமங்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும். ஆனால், ஆந்திராவை பிரித்து காங்கிரஸ் அம்மாநிலத்தின் அமைதியை குலைத்துவிட்டது. பா.ஜ.க ஆட்சியின் போது பிரிக்கபட்ட மாநிலங்களில் அத்தகைய குழப்பம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here