எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

0
292

 

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 16 எரிசக்தி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக tellurian  நிறுவனத்துடன் இந்தியா 50 லட்சம் டன்கள் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் எக்சன்மொபில், பேக்கர் ஹூயுஜ்ஸ், ( exxnmobil , baker hughes) உள்ளிட்ட 16 அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச்சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பில் அமெரிக்காவின் எரிசக்தி துறை சார்ந்த பெரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் பெட்ரோனெட்(petronet) நிறுவனம் அமெரிக்காவின் டெலுரியன் (tellurian) நிறுவனத்துடன் ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் இரண்டரை பில்லியன் டாலராகும்.

இதே போல் நாளை நியுயார்க்கில் மைக்ரோசாப்ட், கூகுள், கோகோ கோலா, பெப்சிகோ, மாஸ்டர் கார்டு, பேங்க் ஆப் அமெரிக்கா ,விசா வால்மார்ட் உள்ளிட்ட 45 முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வட்டமேஜை மாநாடு நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here