எண்ணெய் கத்தரிக்கா குழம்பு

0
1329
சுவையான எண்ணெய் கத்தரிக்கா குழம்பு செய்வது எப்படி.

உங்கள் சுவையை தூண்டும் எண்ணெய் கத்தரிக்கா குழம்பு சமையல்… ருசியான எண்ணெய் கத்தரிக்கா குழம்பு ரெசிபியை சமைத்து சுவைக்கலாம் வாங்க.

சமைக்க தேவையானவை

  •  கத்தரிக்காய் -1/4 கிலோ
  •  சின்ன வெங்காயம் – 15
  •  தக்காளி – 2
  •  புளிக்குழம்பு பொடி – 4 தேக்கரண்டி
  •  தேங்காய் – அரை மூடி (சிறியது)
  •  புளி தண்ணீர் – 2 கப்
  •  பூண்டு – 10 பல்
  •  கடுகு – 1/2 தேக்கரண்டி
  •  வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
  •  நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
  •  கருவேப்பிலை – 1 ஆர்க்கு
  •  உப்பு – தேவைக்கேற்ப

உணவு செய்முறை : எண்ணெய் கத்தரிக்கா குழம்பு

1.

முதலில் பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். பின் வெங்காயத்தில் பாதியை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும்.

2.

பின்பு கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும் பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும்.

3.

இப்பொழுது வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும் . பிறகு கத்தரிக்காயில் லேசாக எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 4 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவேண்டும் .

4.

பாத்திரத்தில் கூட வதக்கி கொள்ளவும். இப்பொழுது வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். பின் வெட்டி வைத்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

5.

பின்னர் வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும் பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும்.

6.

இதனுடன் குழம்பு பொடி சேர்த்து கிளறவும்.அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து கொதிக்க விடவும்.

7.

எண்ணெய் மேலாகதெளிந்து வந்ததும்இறக்கவும்.சுவையானஎண்ணெய் கத்தரிக்காய் குழம்புதயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here