எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

0
273

எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜதஉச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்கபட்டிருந்தது . அதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீதான விசாரணை சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்தது. காங்கிரஸ்-மஜத தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாங்கள் கர்நாடக ஆளுநரை எதிர்க்கவில்லை கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த அவரின் முடிவைதான் எதிர்க்கிறோம் என்று வாதிட்டார்.அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதம் வாதிடுகையில் ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஆளுநர் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைத்துள்ளார் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்க தடையில்லை என்றும், இந்த வழக்கு குறித்து விரிவான விசரணைக்கு பிறகு தான் முடிவு எடுக்க முடியும் என்றும், எடியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை மதியம் 2 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் எடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க மறுத்த நிலையில், இன்று (வியாழகிழமை) காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவியேற்க உள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்