முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா, கடந்தாண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். இதனையடுத்து இந்தத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வெளியான புகாரையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

rt

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு மனு செய்திருந்தார். அதில், பணப்பட்டுவாடா தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார்.

rt2

இதற்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜூ, தங்கமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு பரிந்துரைத்ததாக பதில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் – ட்விட்டரில் தன்னை விமர்சித்த கஸ்தூரியை சந்தித்த ரஜினி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்