தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை சந்திப்பில் சி.பா.ஆதித்தனாரின் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், போக்குவரத்துக்கு ஒழுங்கு செய்வதற்காக ஒரு சில நாட்களுக்குள் அந்த சிலையை எடுத்துவிட்டு, மறுபடியும் அதே இடத்தில் சிலையை வைத்துவிடுவோம் என்று தமிழக அரசு தரப்பிலும், பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை எந்த வேலையும் நடக்கவில்லை என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், ”சென்னை எக்மோரிலிருந்த “தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனார் அவர்களின் திருவுருவச் சிலையை அகற்றியுள்ள எடப்பாடி திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சட்டப் பேரவை தலைவராக பணியாற்றிய அவரது பொன் விழா ஆண்டில் இந்த அராஜகத்தை செய்து அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையை அவமதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. உடனடியாக திரு சி.பா. ஆதித்தனார் சிலையை அங்கே மீண்டும் நிறுவ வேண்டும். தமிழுணர்வுடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: அப்பா சம்பாதித்த பணத்தில் ஜாலியாக இருப்பவரா நீங்கள்? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்