எடப்பாடியிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்

0
465

மத்திய அரசுடன் இருக்கும் சுமூகமான உறவையும் பயன்படுத்தி தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினைளுக்குத் தீர்வு காணும்படி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ’காங். ஆட்சியில் இருந்த காலத்தில் 8 ஆண்டுகளில் ஒரே ஒரு சம்பவம் மட்டுமே நடந்தது’

இது குறித்து அவர், மத்திய அரசு மாநில அரசுடன் இணக்கமாக இருப்பதால் பொதுக்கூட்டங்களில் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் அமைச்சரவை சகாக்களைக் கேட்டுக்கொண்டதாக செய்தி வெளியாகியிருப்பதாகவும், மத்திய அரசுடன் மாநில அரசுக்கு சுமூக உறவு இருப்பதை என்றைக்கும் திமுக வரவேற்கும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : மோடியைத் தவறாகச் சித்தரித்த வாட்ஸ் அப் அட்மின் கைது

மேலும் அவர், மத்திய அரசுடனான சுமூக உறவைப் பயன்படுத்தி, தமிழக மீனவர்களின் 134 படகுகளை மீட்க மாநில அரசால் ஏன் முடியவில்லை என்றும், தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, பிரதமருடன் சென்று பார்ப்பதற்கு ஏன் முயற்சிக்கவில்லை என்றும், மத்திய அரசின் இந்தித் திணிப்பை ஏன தடுக்க முடியவில்லை என்ரும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசுடன் இணக்கமாக உள்ள மத்திய அரசை வற்புறுத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய வைக்க முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள் : World Cinema – The Wind will Carry us

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பது உண்மையென்றால் “நீட்” தேர்வு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று கிராமப்புற மருத்துவ மாணவர்கள், நகர்புற ஏழை மாணவர்கள் மற்றும் போராடும் மருத்துவர்கள் ஆகியோரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : விஜய்க்கு லாபமாக மாறிய ரஜினியின் இழப்பு

ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் பட்டேல் உடனான சந்திப்பையும், மத்திய அரசுடன் இருக்கும் சுமூகமான உறவையும் பயன்படுத்தி விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசுடம் இருக்கும் இணக்கமான சூழ்நிலையப் பயப்படுத்தி, காவேரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு தமிழக மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்