எச்.டி.சி நிறுவனம் தனது புதிய எச்.டி.சி ‘வைல்ட்பயர் X'(HTCWildFireX ) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில்தான் எச்.டி.சி நிறுவனம் டிசயர் 12 மற்றும் டிசயர் 12+ என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், இந்தியாவில் இரண்டு வெரியண்ட்களில் அறிமுகமாகியுள்ள இந்த ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன், ‘மைபட்டி’ (Mybuddy) எனும் தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் திறனுடன் அறிமுகமாகியுள்ளது. மேலும், 3 பின்புற கேமராக்களும், வாட்டர்-ட்ராப் நாட்ச் செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 

எச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன் 3D OPVD டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் ஹைப்பர் ஆப்டிகல் வடிவமைப்புகளை கொண்டுள்ளது. இந்த ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன், ‘மைபட்டி’ (Mybuddy) எனும் பாதுகாப்பு சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் கொண்டது. மேலும் ஆபத்தில் இருக்கும்போது சத்தமான அலாரம், லவ் லொக்கேசன் பகிர்வு, நிகழ்நேரத்தில் சுற்றுவட்டாரத்தில் ஒலி மற்றும் காணோளிகளை பகிர்தல் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளம், இரண்டு நானோ சிம், 6.22-இன்ச் HD+ திரை (720×1520 பிக்சல்கள்), HD+ IPS திரை, வாட்டர்-ட்ராப் நாட்ச், ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 12 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் அளவில் டெப்த் சென்சார் கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.  இந்த பின்புற கேமரா 8Xஹைபிரிட் ஜூம் வசதியையும் கொண்டுள்ளது. முன்புறத்தில் செல்பிக்களுக்கு 8 மெகாபிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது. 

4G LTE, வை-பை, ப்ளூடூத், GPS/ A-GPS, USB டைப்-C சார்ஜர், மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன். 3,300mAh பேட்டரி, 10W சார்ஜிங் வசதியையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த எச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன், இரண்டு வெரியண்ட்களில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அவற்றில் 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி ஸ்மார்ட்போன் ரூ. 9,999க்கும், 4ஜி.பி ரேம், 128ஜி.பி மெமரி ரூ.12,999 க்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த விலை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சபயர் ப்ளூ (Sapphire Blue) என்ற ஒரே வண்ணத்தில் அறிமுகமாகியுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 22 முதல் ஃப்ளிப்கார்ட்டில் துவங்கவுள்ளது.