எச்சரிக்கை: பொது அறிவின் பெயரால் பரப்பப்படும் வெறுப்பு

Hate is taught through Competition Success Review

0
648
வெறுப்பு இயல்பானதல்ல; போதிக்கப்படுவதாகும்

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் விரும்பிப் படிக்கும் மாதப் பத்திரிகையாக Competition Success Review (CSR) மற்றும் அதன் துணை இதழான General Knowledge Today (GK Today) ஆகியவை இருந்து வருகின்றன; ஜூலை 2017 இல் GK Todayவுடன் வழங்கப்பட்ட இணைப்புப் புத்தகம் Improve Your Word Power. இந்தப் புத்தகம் மாணவர்களின் சொல் வளத்தைச் செழுமைப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்தப் புத்தகத்தின் 87ஆம் பக்கத்தில் பள்ளிவாசலான Mosqueக்கு விளக்க வாக்கியம் தரப்பட்டுள்ளது. அந்த விளக்க வாக்கியம் பள்ளிவாசல்கள் விலைமகளிரின் விடுதிகளாக்கப்பட்டன என்று சொல்கிறது. 89ஆம் பக்கத்தில் மேதகு என்ற பொருளில் வரும் Reverend என்ற சொல்லுக்கு விளக்க வாக்கியம் தரப்பட்டிருக்கிறது. அந்த வாக்கியம் கோவா சம்பவத்தில் கிறிஸ்தவர்கள் இந்தியாவுக்கு எதிரான நிலை எடுத்ததாக குற்றம் சாட்டப்படுவதாக சொல்கிறது.

இந்த இரண்டு பக்கங்களை இங்கே பாருங்கள்:

துவேஷம் பரப்பும் பாடம்
துவேஷம் பரப்பும் பாடம்
துவேஷத்தைப் பரப்பும் சொற்கள்
துவேஷத்தைப் பரப்பும் சொற்கள்

பொது அறிவைப் புகட்டுகிறோம் என்ற பெயரில் இந்த நாட்டிலுள்ள 20 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பியுள்ளது இந்த மாத இதழ்; பொது அறிவுத் தளத்தில் நீண்ட காலமாக மாணவர்களின் துணைவர் என்று நம்பப்பட்ட காம்பெடிஷன் சக்சஸ் ரெவியூவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியிருக்கிறது. மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேடிக்கொள்ளும் மதவெறிக் குழுக்களின் பரப்புரைச் சாதனங்களிலிருந்து காப்பியடித்த வாக்கியங்கள் இவை; இவற்றைத் தேர்வு செய்த உதவி ஆசிரியர் யார்? அவருடைய அரசியல் மதவெறிக்கு ஆதரவானதாக இருந்தாலும் தலைமை ஆசிரியர் இது போன்ற தவறுகளைத் திருத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். அச்சிடுவதற்குக் குறைந்த கால அவகாசம் உள்ள நிலையில் இதுபோன்ற மதவெறிக் கருத்துக்களை அப்படிப்பட்ட சிந்தனை கொண்ட உதவி ஆசிரியர் புகுத்தியிருக்கும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இளைய மனங்களில் துவேஷத்தைப் புகுத்தும் இந்த அயோக்கியச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது; களையெடுக்கப்பட வேண்டியது.

வெறுப்பு என்பது இயல்பானதல்ல; அது எப்போதுமே போதிக்கப்படுகிறது; அதற்கு காம்பெடிஷன் சக்சஸ் ரெவியூவும் களமாகியுள்ளது. இப்போது டாட் காம் இதற்கான விளக்கத்தை காம்பெடிஷன் சக்சஸ் ரெவியூவிடம் கேட்டுள்ளது; பதில் வந்தவுடன் இந்தச் செய்தியில் அதனை இணைத்து விரிவுபடுத்துவோம்.

இதையும் படியுங்கள்: மக்கள் தொகை பற்றி ஆர்.எஸ்.எஸ் சொல்வதில் உண்மை இருக்கிறதா?

பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்