எங்கள் கைகள்தான் உங்கள் இல்லத்தை சுத்தம் செய்கிறது!

0
501

”நாங்கள் செய்யும் வேலைக்குத்தான் சரியான சம்பளம் கேட்கிறோம், எங்கள் கைகள் தான் உங்களது இல்லத்தை சுத்தம் செய்கிறது”. நினைவில் கொள்ளுங்கள். வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக ஒன்றினைந்து எழுப்பிய ஒலிகள்தான் இவை.
தேசிய வீட்டுவேலைத் தொழிலாளர் இயக்கம் சார்பாக சர்வதேச தரமான வேலை தின நாளில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டதில் இந்திய அரசுக்கு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

போராட்டத்தின் தேசிய ஒருகினைப்பாளார் கீதா கூறுகையில், ”தேசிய வீட்டுவேலைத் தொழிலாளர் இயக்கமானது இந்தியாவில் 21 மாநிலங்களில் வீட்டுவேலைத் தொழிலாளர்களின் உரிமைகளை அரசுக்கு முன்வைத்து போராட்டம் செய்து வருகிறோம். இதன் விளைவாக ஒன்பது மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் தமிழகதில் பல போரட்டங்கள் நடத்தியும் இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை”, என்றார்.

12082731_867654620009538_1315455386_o

அரசுக்கு வைக்கப்படுள்ள கோரிக்கைகள்:

1. இந்திய அரசு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சி-189 பரிந்துரை மற்றும் விதிமுறைகளுக்கு கையெழுத்திட வேண்டும்.

2. வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு தேசிய அளவிலான மத்திய சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

3. தமிழக அரசு இன்றைய விலைவாசியை நினைவில் கொண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டம் கொண்டுவர வேண்டும்.

4.பாலியல் தொடர்பாக எங்களுக்கு அளிக்கப்படும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

5.பயண செலவுக்கு பணம் அளிக்க வேண்டும்.

6.போனஸ் அளிக்கப்பட வேண்டும்.

7.ஒரு மணி நேரத்திற்கு 50ரூபாய் வழங்க வேண்டும்.

8.எங்களுக்கென மருத்துவ திட்டம் கொண்டு வரப்படவேண்டும்.

வீட்டுவேலைத் தொழிலாளர்களின் இன்றைய நிலை

கஸ்தூரி:

”வயது 34 , நான் நாலு வருசமா வேலை பாக்குறன், வீட்டு முதாளிகளுக்கு எல்லா நாங்க அவங்களுக்கு அடிமைங்குற எண்ணம் இருக்கு. கொஞ்சம் கூட மரியாதை தர மாட்டாங்க. எதாவது அவசரத்துக்கு கூட லீவு எடுக்கக் கூடாது. உடம்பு முடியலன்னா கூட அவங்க வேலையை செஞ்சுட்டுதான் போகணும். இல்லனா ஆள மாத்திடுவாங்க.”

IMG_20151007_152239795_HDR

சகுந்தலா:

”ஒரு வீட்டுக்கு நாலு மணி நேரம் வேலை செய்யுறன். ஆனா மாசத்துக்கு 1,500 தான் தராங்க. சம்பளத்தை அதிகமா கேட்டா உடனே ஆள மாத்திடுவாங்க.எங்களுக்கான மரியாத இல்லை. அவங்க பசங்க முன்னாலே திட்டுவாங்க அதலாம் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.தமிழக அரசு எங்களுக்கு உதவி பண்ணா நல்லா இருக்கும். நாங்க தான் கஷ்டப் பட்டோம். எங்க பசங்களாவது நல்லா இருக்கணும்.”

12162533_867654643342869_23621258_o

காமாட்சி:

”14 வயது முதல் வீட்டுவேலை செய்து வருகிறேன். நான் வேலை செய்த முதலாளி வீட்டில் அவரது அம்மா வீட்லயும் வேலை செய்வேன். அதிக வேலை, ஆனால் சம்பளம் குறைவு. ஒரு நாள் கூட விடுமுறை கிடையாது. என் கணவனும் சரியில்லை கையெல்லாம் தேஞ்சு போய்டும்”, என்று தன் கைகளை மறைக்கிறார்.

நம் இல்லத்தை அழகாக்கும் இவர்கள் கேட்பது தங்களது சம்பள உயர்வை மட்டும் அல்ல. ஒரு சக மனிதன் மற்றவரிடத்தில் எதிர்பார்க்கும் மரியாதையும் அன்பின் தேவையும் இதில் அடங்கும்.ஆகவே உரிமையாளர்கள், வீட்டு வேலை செய்பவர்களை பணியாளர்களாக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை மாறினாலே இவர்களது கோரிக்கைகள் நிறைவேறிவிடும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்