எங்கள் எம்எல் ஏக்களை வாங்குவது எளிதல்ல; குதிரை பேரம் நடத்துவது ஜனநாயகமா? – கெஜ்ரிவால் ; சில மணி நேரங்களில் பாஜகவுக்கு தாவிய ஆம் ஆத்மி எம்எல்ஏ

0
172

எதிர்க்கட்சி எம்.எல் ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் இழுப்பதுதான் ஜனநாயகமா? எங்கள் எம்எல் ஏக்களை வாங்குவது எளிதல்ல என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார். அவ்வாறு கூறிய சில மணி நேரங்களிலேயே டெல்லி காந்தி நகர் எம் எல் ஏ அனில் பாஜ்பாய், பாஜக அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 

இது குறித்து பேசிய விஜய் கோயல் ஆம் ஆத்மி கட்சி பணி செய்யும் விதம் எனக்கு பிடிக்கவில்லை. எதற்காக கட்சியை தொடங்கினார்களோ அந்தக் கொள்கையில் இருந்து தடம் பிறழ்ந்து செல்கிறார்கள் அதனால் நான் பாஜகவில் இணைந்துள்ளேன் என்றார். 

 ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை தலா ரூ10கோடி கொடுத்து  விலைக்கு வாங்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். 

மத்திய பாஜக அரசுக்கு தங்கள் ஆட்சியில் வளர்ச்சிக்கான விஷயம் என்று கூறுவதற்கு எதுவும் இல்லை. எனவேதான் தற்போது அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு முன்னரும் கூட அக்கட்சி எங்களது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சித்தது.  ஆனால் அப்போது தேர்தலில் அவர்களுக்கு பொதுமக்கள் சரியான பதிலை வழங்கினர்.  இந்த முறையும் அவர்களது நடவடிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும்.

மேற்கு வங்க தேர்தல் பிரசார கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின்  42 எம் எல் ஏக்களும் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்று மோடி பேசியிருந்தார். அவ்வாறு பேசியது  சரியல்ல.  இந்தியா ஒரு ஜனநாயக நாடு.  அதனாலேயே தற்போது தான் பதவியில் இருப்பதை பிரதமர் மோடி உணர வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

அதற்கு வியாழனன்று பதிலளித்த பாஜகவின் விஜய் கோயல் , ‘ஏழு எம்.எல்.ஏக்கள் அல்ல; ஆம் ஆத்மி கட்சியின் மீது வெறுப்படைந்துள்ள மொத்தம்  14 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியை விட்டு விலகத் தயாராக உள்ளதாக தெரிவித்தது.

இது குறித்து கேள்வி எழுப்பிய அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் டியர் விஜய்  கோயல் நீங்கள் எவ்வளவு கொடுத்தீர்கள், அவர்கள் எவ்வளவு கேட்டார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி அவர்களே,  நீங்கள் மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கி கவிழ்க்க முயல்கிறீர்களா? இதுதான் உங்கள் பார்வையில் ஜனநாயகம் என்பதற்கு அர்த்தமா? அவர்களை விலைக்கு வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? முன்பு எங்கள் எம்.எல்.ஏக்களையும் விலைக்கு வாங்க முயன்றீர்கள். ஆம் ஆத்மி தலைவர்களை விலைக்கு வாங்குவது எளிதல்ல என்று ஹிந்தியில் பதிவிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here