எங்களை பின்தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை : இளவரசர் ஹாரி எச்சரிக்கை

0
135

பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் வெளியேறிய பின் கனடாவில் தங்களது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். பரம்பரை சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் எனவும் அவர்கள் கூறினர். இவர்களின் இந்த முடிவால் அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை, ராணி இரண்டாம் எலிசபெத் தரப்பில் கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது. அதில், வரும் வசந்த காலத்தின்போது (மார்ச்-ஜூன்), இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச பட்டங்களை துறக்கின்றனர், பொதுமக்களின் வரிப்பணத்தை எதற்கும் பெற மாட்டார்கள், வின்ட்சார் கோட்டை அருகே தங்களது இல்லத்தை புதுப்பிப்பதற்காக ஹாரி, மேகன் தம்பதியர் மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெற்ற பணத்தை திரும்ப அளித்து விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிரதிநிதியாக எந்தவொரு விழாவிலும் இளவரசர் ஹாரி பங்கேற்க முடியாது. அரச குடும்ப கடமைகள் எதையும் செய்யவும் மாட்டார்.

இந்நிலையில் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும், கனடாவில் தங்களது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், தங்களை பின்தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு இளவரசர் ஹாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இருவரும் கனடாவின் வான்கூவர் தீவில் உள்ள விக்டோரியா சொகுசு இல்லத்தில் குடியேறியுள்ளனர்.

இளவரசர் ஹாரி தொடர்பான புதிய புகைப்படங்கள் பிரிட்டன் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. அவை அனைத்தும் புதரில் மறைந்திருந்து எடுக்கப்பட்டதாக ஹாரியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆவேசம் அடைந்துள்ள ஹாரி, தங்களை பின்தொடர்ந்து வந்தால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here