கர்நாடக மாநிலம் ஹூப்ளி விவசாயிகள், தங்களைக் கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவைச் சேர்ந்த விவசாயிகள் 91 பேர் அம்மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஒரு கடிதம் வழங்கினர். அதில் தங்கள் விளைபொருட்களுக்குக் உரிய விலை கிடைக்கவில்லை என்றும், தங்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்குப் போதிய அளவில் இழப்பீடு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டு, அதனால் வாழ வழியில்லாத தங்களைக் கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரியிருந்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹூப்ளி விவசாயிகள் 700 பேர், தங்களைக் கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான மனுவினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நேரில் கொடுக்கவுள்ளனர்.

ஹூப்ளி விவசாயிகளின் பிரச்சினை என்ன?

கோவா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைப் பகுதி மக்கள் மகதாயி என்னும் ஆற்றுநீரை நம்பியுள்ளனர். மகதாயி ஆற்றிலிருந்து, விவசாயத்திற்கு போதிய தண்ணீர் திறந்துவிடக் கோரி கோவா மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் மகதாயி ஆற்றிலிருந்து கர்நாடகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கோவா மாநில அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தீர்வு காண வலியுறுத்தி, கன்னட அமைப்புகள், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹூப்ளி விவசாயிகள், தங்களைக் கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here