குஜாரத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவச் சந்தித்ததற்கு கசாப்புக் கடைக்காரர்களும், சட்டவிரோத தொழில் செய்பவர்களும்தான் காரணம் என அம்மாநில உள்துறை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 115 இடங்களில் வெற்றிபெற்றிருந்த பாஜகவால், இம்முறை 99 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சி கடந்த முறையைவிட இம்முறை கூடுதலாக 19 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் குஜராத் மாநில சட்டப்பேரவையில் அம்மாநில உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்தத் தலைவருமான பிரதீப்சிங் ஜெடேஜா, “எங்களுக்கு யார் வாக்களிக்கவில்லை என்பதை நான் கூறுகிறேன். பசுவதைக்கு எதிராக கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்ததால் கசாப்புக் கடைக்காரர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். முத்தலாக்கிற்கு ஆதரவானவர்கள் எங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.” என பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்