சமீபத்தில் எந்த மணிரத்னம் படத்துக்கும் இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததில்லை. செக்கச் சிவந்த வானம் ட்ரெய்லர் திரையரங்கில் ஓடும்போது எழும் கைத்தட்டல் 2.0 படத்தின் டீஸருக்குகூட இல்லை. விஜய் சேதுபதி, சிம்பு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் இந்த எதிர்பார்ப்பு என்பதை சொல்லத் தேவையில்லை.

வரும் 27 ஆம் தேதி செக்கச் சிவந்த வானம் வெளியாகிறது. மணிரத்னத்தின் முந்தையப் படங்கள் காற்று வெளியிடை, ஓ காதல் கண்மணி, கடல் என எதற்கும் அதிகாலை சிறப்புக் காட்சிகள் இருந்ததில்லை. ஆனால், செக்கச் சிவந்த வானத்துக்கு சென்னையில் மட்டும் 7 திரையரங்குகள் அதிகாலை 5 மணிக்கு படத்தை திரையிடுகின்றன. மற்ற திரையரங்குகள் 6 மணி, 7 மணி மற்றும் 8 மணி என சிறப்புக் காட்சிக்கு நேரம் ஒதுக்கியுள்ளன.

மணிரத்னத்தின் படங்கள் சமீபமாக பெரிய வசூலை எட்டுவதில்லை. நஷ்டத்தையே பெரும்பாலும் சந்திக்கின்றன. அந்த சரித்திரத்தை செக்கச் சிவந்த வானம் மாற்றி எழுதும் என்பது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் நம்பிக்கை. 27 ஆம் தேதி காலை 7 மணிக்கு சரித்திரம் மாறுமா என்பது தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்