ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக தன என்றும், திமுகவின் உண்மை முகம் தெரிந்து தான் ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் கொடுக்காமல் மக்கள் தண்டித்துள்ளனர் என்றும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “பஞ்ச பூதத்திலும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு என மக்கள் ஈவு, இரக்கமின்றி பறிக்கும் கட்சி திமுக தான்.

தமிழ்நாட்டில் ஊழலை அறிமுகம் செய்ததும் இந்த திமுக தான். ஒவ்வொரு முறை அதிகாரத்திற்கு வரும்போதும் ஒவ்வொரு விதமான ஊழல். உலக அளவில் ஊழல் வரலாற்றில் இடம் பிடித்த ஒரே கட்சியும், ஆட்சியும் திமுக தான்.

திமுகவினர், “எங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை; தண்டனை அனுபவிக்கவில்லை. விவாதிக்க தயாரா?” என்று பயத்தில் நடுங்கி உளறுவார்கள். நெருப்பில்லாமல் புகையாது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பட்டியலிட்ட ஊழல் புகார்களால் 13 ஆண்டுகள், அலைக்கற்றை ஊழலால் 10 ஆண்டுகள் என 23 ஆண்டுகள் ஆட்சி, அதிகாரத்தை கொடுக்காமல் மக்கள் திமுகவை தண்டித்துள்ளனர். இனியும் தண்டிப்பார்கள்.” என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here