ஊழலில் பாஜகவுடன் காங்கிரஸால் போட்டியிட முடியாது – ராகுல்காந்தி

0
296

‘ஊழலில் பாஜகவுடன் காங்கிரஸால் போட்டியிட முடியாது இதில் பாஜகவே வெற்றி பெறும்” என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு செய்த சாதனைகளை ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கர்நாடகத்தில் 2008 -2013ஆம் ஆண்டு வரை பாஜக அரசின் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், 2013- 2018ஆம் ஆண்டு வரையிலும் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஆட்சிகாலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் ஒப்பீடு அந்த பதிவில் உள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு செயல்படுத்திய அன்னபாக்யா திட்டத்தின்மூலம், 4 கோடி மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டமாக கருதப்படும் ராம்தால் மரோல் திட்டத்தை கர்நாடகத்தில்
காங்கிரஸ் அரசுதான் செயல்படுத்தியது. உலகிலேயே மிகப்பெரிய சூரியமின் ஒளி பூங்காவை கட்டியதும் காங்கிரஸ் அரசுதான்.
22 லட்சம் விவசாயிகள் வாங்கிய ரூ.8,165 கோடி விவசாய கடனை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது.

அதேநேரத்தில், பாஜக அரசின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் எடியூரப்பா ஊழல் வழக்கில் கைதாகி சிறைச் சென்றார். நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்யா ஷெட்டி கைதாகி சிறைச் சென்றார்.
ரூ.35,000 கோடி மதிப்பிலான நிலக்கரி சுரங்கஊழல் வழக்கில் ரெட்டி சகோதரர்கள் கைதாகினர்.
53 லட்சம் வேலைவாய்ப்புகள் சித்தராமையா அரசால் புதிதாக உருவாக்கப்பட்டன. ஆனால் பாஜக அரசால் 26.64 லட்சம் வேலைவாய்ப்புகள்தான் உருவாக்கப்பட்டன.ரூ.12,000 கோடி விவசாயக் கடன் காங்கிரஸ் அரசால் அளிக்கப்பட்டது.
அதேநேரத்தில், முந்தைய பாஜக அரசால் ரூ.6,560 கோடிதான் விவசாயக் கடன் வழங்கப்பட்டது.

600

15.5 லட்சம் புதிய வீடுகள் காங்கிரஸ் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டன.பாஜக அரசு , 11.3 லட்சம் வீடுகள்தான் கட்டி கொடுத்துள்ளது.

இந்த புள்ளி விவரங்களில் இருந்துஇரண்டு அரசுகளாலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த எண்ணிக்கையே எது சிறந்த அரசு என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்