டிரான்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்தப் பட்டியல், அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. முதல் இரண்டு இடங்களை டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. 180 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் ஊழலற்ற நிர்வாகம் என்ற அடிப்படையில் இந்தியா 78வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா கடந்த ஆண்டை விட 3 புள்ளிகள் அதிகரித்து 78வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2014ஆம் ஆண்டு 85வது இடத்தில் இருந்த இந்தியா, 2015ல் 9 இடங்கள் ஏற்றம் கண்டு 76வது இடத்தை அடைந்தது. 2017ஆம் ஆண்டில் இந்தியா 81வது இடத்தை பிடித்து இருந்தது.

கடைசி இடங்களில் சோமாலியா, சிரியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகள் உள்ளன. மேலும் நமது அண்டை நாடுகளான சீனா 87வது இடத்திலும்,பாகிஸ்தான் 117வது இடத்திலும் உள்ளதாக டிரான்பரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு கணித்துள்ளது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 180 நாடுகளில் 3ல் 2 நாடுகள் 50 புள்ளிகளுக்கு கீழ் பெற்றுள்ளன. சராசரியாக 43 புள்ளிகள் பெற்றுள்ளன.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here