ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவுக்கு உதவுங்கள்

கலையால் மக்களை ஒன்றிணைப்போம்.

0
245
ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவில் சிலம்பாட்ட வீராங்கனை.

சென்னைப் பெருநகரின் ஊரூர் ஆல்காட் குப்பம் மக்களுடன் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா இணைந்து நடத்தும் ஊரூர் ஆல்காட் குப்பம் விழா மக்களின் பங்களிப்போடு நடந்து வருகிறது; கர்நாடக இசை நடக்கும் சென்னை மயிலாப்பூர் ராகசுதா ஹாலில் கானா பாடல்களையும் கானா இசைக்கப்படும் ஊரூர் ஆல்காட் குப்பத்தில் கர்நாடக இசையையும் கேட்கச் செய்கிற கலாச்சார இணைப்புப் பாலமாக இந்த விழா களைகட்டுகிறது.

சென்னைப் பெருநகர மக்களின் நிதியுதவியுடன் பிப்ரவரி 11 வரை நடக்கும் இந்த விழாவுக்கு இன்னும் நிதி தேவைப்படுகிறது; உங்களது நிதியுதவியை இந்த இணைப்பைச் சொடுக்கி வழங்குங்கள். உங்களது சிறிய உதவிகூட மக்களின் சங்கமத்துக்கும் சந்திப்புக்கும் கைகொடுப்பதாக இருக்கும். இந்த விழாவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவின் முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

இதையும் படியுங்கள்: “கேள்வி கேட்டா ‘மேக் இன் இந்தியா’ன்னு வட சுடுவான்”: டி.எம்.கிருஷ்ணாவின் ‘புறம்போக்கு’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்