ஊடகங்கள் பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களாக செயல்படுகின்றனர் – விளாசும் மம்தா

West Bengal Chief Minister Mamata Banerjee on Thursday alleged that the judiciary was not coming to the help of a “crying” democratic system.

0
259

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை  கைது செய்ய புதன்கிழமை  மாலை புலனாய்வு அமைப்புகள் கையாண்ட விதத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்தது. அதைத் தொடர்ந்து சுமார் 24 மணி நேரத்துக்கு அவர் பொதுவெளியில் காணவில்லை. இப்படிபட்ட சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குச் சென்று செய்தியாளர்களை சந்தித்தார் சிதம்பரம். 

தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற போது கைது செய்யப்பட்டார். அப்போது, சிபிஐ அதிகாரிகள், ப.சிதம்பரத்தைக் கைது செய்ய அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்தனர். 

கிட்டதட்ட 20 முறைக்கு மேல் சிபிஐ அதிகாரிகள் கூப்பிட்டபோதெல்லாம் ப சிதம்பரம் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்த மம்தா பானர்ஜி ப.சிதம்பரம் பொருளாதார நிபுணர், முன்னாள் உள்துறை அமைச்சராகவும்,  நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர். அவர் கைது செய்யப்பட்ட விதம் வேதனை அளிக்கிறது.

நமது நாட்டில் ஜனநாயகத்தின் தூண்களாக சுதந்திரமான நிறுவனங்கள், தேர்தல் ஆணையம், ஊடகங்கள், மற்றும் நீதித் துறை இருக்கிறது.  

இங்கு நமது நாட்டில் ஜனநாயக முறை நசுக்கப்பட்டு வரும் நிலையில், அதை காப்பாற்ற நீதித்துறை முன்வரவில்லை. 

ரபீந்தரநாத் தாகூர் இதை எவ்வாறு கூறியிருக்கிறார் என்றால் நீதி தனிமையில் யாருக்கும் தெரியாமல் அழுதுக் கொண்டிருக்கிறது. 

ஊடகங்கள் பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களாக செயல்பட்டு வருகிறது என்று விளாசியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here